தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.6.11

எகிப்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் கன்னித்தன்மை சோதனை?


கெய்ரோ, ஜூன். 4- எகிப்து நாட்டில் அதிபர் முபாரக் பதவி விலகக்கோரி நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களிடம் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக மனித உரிமைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
எகிப்து நாட்டில் அப்போதைய அதிபர் முபாரக் பதவி விலகக்கோரி கெய்ரோ நகரில் உள்ள தக்ரிர் சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் தங்
கி இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். முபாரக் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பிறகும் போராட்டக்காரர்கள் எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. இதனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து அந்த சதுக்கத்தில் முகாமிட்டு இருந்தனர். ராணுவம் அவர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தியது. போராட்டக்காரர்களுடன் இருந்த பெண்களில் 18 பேரை ராணுவம் கைது செய்தது. இந்த 18 பேரும் கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்காக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாக மனித உரிமைக்குழு குற்றஞ்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை ராணுவம் மறுத்து உள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்களில் சிலர் கூறுகையில், கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். அதோடு தங்களை அடித்து உதைத்ததாகவும், மின்சார கம்பிகளை தங்கள் உடலில் கட்டி மின்சார அதிர்ச்சி கொடுத்ததாகவும் தெரிவித்தனர். ஆண் ராணுவ வீரர்களுடன் நிறுத்தி போட்டோ எடுத்ததாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.

0 கருத்துகள்: