இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் கைபர் பக்தூல்க்வா மாகாணத்தில் தாலிபான் போராளிகளுடன் நடந்த மோதலில் 14 ராணுவத்தினர் பலியாகினர்.ஆப்கான் எல்லையையொட்டிய லோவர் தில் மாவட்டத்தில் ராணுவ பாதுகாப்பு மையத்திற்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கூட்டமாக வந்த தாலிபான் போராளிகள் பாதுகாப்பு மையத்திற்கு அருகிலிருந்த
ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும், ஏராளமானோருக்கு காயமேற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போராளிகளை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள ராணுவம் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக