வாஷிங்டன், ஏப். 23- லிபியாவில் அதிக சத்தம் எழுப்பாத அமெரிக்க ஆயுத விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ரொபர்ட் கேட்ஸ் கூறினார்.
லிபியாவில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் கடாபி ராணுவத்தினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். லிபிய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை
கொல்வதைத் தடுக்க அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் கூட்டுப்படைகள் போராட்டக்காரர்களுக்கு உதவியாக அங்குள்ளன.
கொல்வதைத் தடுக்க அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் கூட்டுப்படைகள் போராட்டக்காரர்களுக்கு உதவியாக அங்குள்ளன.
இந்நிலையில் அதிக சத்தம் எழுப்பாத ஆள் இல்லாத ஆயுத விமானங்களை லிபியாவில் அமெரிக்கா பயன்படுத்துகிறது. இதற்கு ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரொபர்ட் கேட்ஸ் தெரிவித்தார். ஆள் இல்லாத ஆயுத விமானங்களை ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக