கெய்ரோ:எகிப்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குபதிவிற்கான எந்திரங்களை வழங்கத் தயார் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரைஷி தெரிவித்துள்ளார். எகிப்து சட்ட அமைச்சர், செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஆகியோருடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் இதனை தெரிவித்தார் குரைஷி.
தேர்தலுக்கு அதிகம் நாட்கள் இல்லை என்பதால் தங்களுடைய
வாக்குப்பதிவு எந்திரங்களை எகிப்திற்கு அளிப்பதில் மகிழ்ச்சி என குரைஷி தெரிவித்தார்.ஜனவரி மாதம் எகிப்தின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பதவி விலகினார்.பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ராணுவம் வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

தேர்தல் நடைமுறையில் எகிப்து அதிகாரிகளுக்கு உதவுவதற்காக மூன்று தினங்கள் முன்பு குரைஷியின் தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக்கொண்ட குழு கெய்ரோவிற்கு சென்றிருந்தது.எகிப்தில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு எல்லாவித உதவிகளையும் இந்தியாவின் புறத்திலிருந்து கிடைக்கும்.
சர்வதேச கண்காணிப்பை இந்தியா ஆதரிக்கவில்லை.ஜனநாயகத்தின் ‘அற்புதமான எந்திரம்’ மின்னணு வாக்குப்பதிவு எந்திரமாகும். இந்திய தேர்தல் நடைமுறையில் இது புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு குரைஷி தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக