சனா,ஏமன் அதிபர் பதவி விலகுவது குறித்து வளைகுடா கூட்டுறவு கவுன்சில் முன் வைத்த பரிந்துரைகளை, எதிர்ப்பாளர்கள் நிராகரித்து விட்டனர்.
இந்நிலையில், நேற்று ஏமனில் அதிபர் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோரை திரட்டி பேரணி நடத்தினர். ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகுவது குறித்து, நேற்று முன்தினம் வளைகுடா கூட்டுறவு
கவுன்சில் சில பரிந்துரைகளை முன் வைத்தது. அதன்படி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் 50 சதவீதம், பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 40 சதவீதம், பிற உதிரி கட்சிகள் 10 சதவீதம் என்ற அடிப்படையில் இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும். அந்த அரசு அமைந்த 30 நாட்களில் சலே பதவி விலக வேண்டும்.
கவுன்சில் சில பரிந்துரைகளை முன் வைத்தது. அதன்படி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் 50 சதவீதம், பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 40 சதவீதம், பிற உதிரி கட்சிகள் 10 சதவீதம் என்ற அடிப்படையில் இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும். அந்த அரசு அமைந்த 30 நாட்களில் சலே பதவி விலக வேண்டும்.
அவர் பதவி விலகி, 60 நாட்களில், ஏமன் அரசியல் சாசன ரீதியில், அரசின் மேற்பார்வையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்தப் பரிந்துரைகளை அதிபர் எதிர்ப்பாளர்கள் முற்றாக நிராகரித்து விட்டனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைக்கும், 'இளைஞர் அமைதிப் புரட்சிக் குழு' வெளியிட்ட அறிக்கையில், "இந்தப் பரிந்துரைகளில், சலே உடனடியாக பதவி விலகும்படி வலியுறுத்தப்படவில்லை. கொலைகாரர்களான சலே மற்றும் அவரது கூட்டாளிகள், தேர்தலுக்குப் பின் பாதுகாப்பாகத் தப்பிக்கும்படியான ஆலோசனைகள் தான் உள்ளன" என்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் நேற்று அதிபர் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள், அருகருகே பேரணி நடத்தினர். இந்தப் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இரு தரப்பிற்கும் இடையில் மோதல் ஏற்படாமல் பாதுகாக்க, ராணுவமும் போலீசும் குவிக்கப்பட்டிருந்தன. ஆதரவுப் பேரணியில் பேசிய அதிபர் சலே, "ஏமன் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு ஆலோசனைகளைக் கூறி வரும் வளைகுடா கூட்டுறவு கவுன்சிலின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. மக்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும். ரத்தம் சிந்த வேண்டாம் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். நமது எதிர்ப்பாளர்களை நாம் ஆயுதமின்றி எதிர்கொள்வோம்" என்று கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக