தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.4.11

ஷியா தலைவர் கொலை வழக்கில் தாரிக் அஸீஸிற்கு விடுதலை


tarik ajis
பாக்தாத்:ஷியா தலைவர் தாலிப் அல் ஸுஹைலை கொலைஸ் செய்த வழக்கில் சதாம் ஹுஸைனின் ஆட்சிக் காலத்தில் துணை பிரதமராக பதவி வகித்த தாரிக் அஸீஸை நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஆறுபேரை தண்டித்த நீதிமன்றம் மூன்றுபேரை தூக்கிலிட உத்தரவிட்டது.
1994-ஆம் ஆண்டு ஈராக் உளவாளிகள் ஸுஹைலை லெபனான் தலைநகரான பெய்ரூத்தில் வைத்து கொலை செய்ததா
க வழக்கு. ஈராக்கிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஸுஹைல் லெபனானில் வசித்து வந்தார். சதாமின் நம்பிக்கைக்கு பாத்திரமானவரும், சர்வதேச அளவில் ஈராக்கின் பிரதி நிதியாகவும் செயல்பட்டவர் தாரிக் அஸீஸ்.
அவரையும் மற்றொரு நபர் ஒருவரையும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிபதி மஹ்மூத் அல் ஹஸன் விடுதலை செய்தார். சதாம் ஹுஸைனின் ஆட்சி காலத்தில் ஷியாக்களை கூட்டுப் படுகொலை செய்த வழக்கில் முன்னர் நீதிமன்றம் தாரிக் அஸீஸிற்கு மரணத்தண்டனை விதித்திருந்தது.

0 கருத்துகள்: