சிரியாவின் ஹோம்ஸ், இஷ்ரா, ஹரஸ்டா மற்றும் டமாகஸ் நகரங்களில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட வெள்ளிக்கிழமை தொழுகையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்களின் போது சிரியா அரசு படைகளின் துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 43 ஆர்ப்பாட்டகாரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை விடுத்துள்ள கண்டனத்தில் 75 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
சி.என்.என் உட்பட பல சர்வதேச இணையத்தளங்களுக்கு நாட்டுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்றைய கலவரங்களில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து உறுதியான தகவல்களை வழங்க முடியாதுள்ளது.
இராணுவ படையினர் போல் அல்லாது, ஓர் ரவுடிக்கும்பலாக அரச படைகள் செயற்பட்டதாகவும், பெரும்பாலானோர் கடத்தப்பட்டிருப்பதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர் சி.என்.என் க்கு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை வன்முறையை பயன்படுத்தி ஒடுக்குவது சரியல்ல எனவும், இவ் வன்முறைகளுக்கு சர்வதேச ரீதியில் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் பிரிட்டனின் வெளிவிவகார செயலர் வில்லியன் ஹாகுவே தெரிவித்துள்ளார்.
நேற்றைய கலவரங்களுக்கு முன்னதாக, கடந்த மார்ச் நடுப்பகுதியிலிருந்து, தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த கலவரங்களில் 200 க்கு அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவில், அதிபர் பஷார் அல் - ஆஷாத்துக்கு எதிராக இம்மக்கள் போராட்டம் வெடித்தது.
எனினும், சிரிய அரசுக்கு எதிரான கலவர தூண்டுதலுக்கு அமெரிக்காவே காரணமென முன்னர் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், இதற்கான ஒப்பந்தத்தை சிரிய எதிர்க்கட்சி தலைவருடன், கடந்த 2005ம் ஆண்டு மேற்கொண்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்திருந்தது.

நன்றி: தமிழ் மீடியா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக