தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.4.11

குஜராத் மதக்கலவரத்தை, வேண்டுமென்றே அனுமதித்து வேடிக்கை பார்த்தார் நரேந்திர மோடி : உச்சநீதிமன்றில் உயரதிகாரி வாக்குமூலம்


கடந்த 2002 ம் ஆண்டு, குஜராத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலியெடுத்த மதக்கலவரம் இடம்பெற்றமைக்கு, அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி வேண்டுமென்றே அக்கலவரத்தை நடக்க அனுமதித்ததே காரணம் என போலீஸ் அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வாக்குலாம் அளித்துள்ளார்.
சஞ்சீவ் பட் எனும் குறித்த உயரதிகாரி, இது தொடர்பில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கையில்,
கலவரத்தின் போது உதவி கோரி மக்கள் விடுக்கும் அழைப்புக்களை புறந்தள்ளுங்கள் என போலிஸ் அதிகாரிகளுக்கு நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார் என தெரிவித்துள்ளார். மேலும், இந்துக்கள் மிகுந்த கோபத்திலிருப்பதால், அவர்களுடைய ஆத்திரத்திற்கு வடிகால் அவசியம் எனவும் நரேந்திரமோடி தெரிவித்ததாக, அவர் கூறியுள்ளார்.

கோத்ரா எனும் இடத்தில் ரயில் ஒன்றில் சென்ற ஹிந்து யாத்ரீகர்கள், ரயில் தீயில் கருகி இறந்ததை அடுத்து, அம்மாநிலத்தில் மதக்கலவரங்கள் வெடித்திருந்தன.

இதில் பெரும்பான்மையான முஸ்லீம்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தனர். இவற்றில், 1200 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: