தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.4.11

டைம்ஸ் பட்டியலில் 'மகிந்த' பெயர் நீக்கம் : அங்கீகாரத் தேடலில் அடுத்த தோல்வி : நடந்தது என்ன?


'2011 இன் உலகின் மிகுந்த செல்வாக்கான நபர்கள்' இன் இறுதிப்பட்டியல் டைம்ஸ் ஊடகவியலாளர்களின் தீவிர பரிசீலணைக்கு பின் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21ம் திகதிவரை நீடிக்கப்பட்டிருந்த மக்கள் வாக்களிப்பின் படி தனது ஆய்வுகளை மேற்கொண்ட டைம்ஸ், இறுதிப்பட்டியலை நேற்று இரவு வெளியிட்டது. இதில், நேற்று வரை 4ம் இடத்தில் இருந்து வந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இப் பட்டியலில் (World Most Influence People) இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னதாக 6 வது இடத்தில் இடம்பெற்றிருந்ததும், பின்னர் 4ம் இடத்திற்கு முன்னேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வாக்களிப்புக்களில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாகவும், இதற்காக ஜனாதிபதியின் ஊடக செயலகத்தில் பிரத்தியேக குழு ஒன்று அமைக்கப்பட்டு, மோசடி வாக்குகள் சேர்க்கப்பட்டு பிரயோகிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும் ராஜபக்சவின் பெயர் இடம்பெற்றமைக்கு எதிர்ப்புக்களும், விமர்சனங்களும் அதிகமாக எழுந்துவந்திருந்தது.

இறுதியாக இப்பட்டியலில், மகிந்த ராஜபக்ச நான்காம் இடத்தில் இருந்தவரை, அவருக்கு ஆதரவாக 194,481 வாக்குகளும், எதிராக 44,428 வாக்குகளும் கிடைத்திருந்தன.

இப்பட்டியலில் அதிகமான எதிரான (Not Infulential) வாக்குகளை பெற்றுக்கொண்டவும், மகிந்த ராஜபக்சவே என்பது குறிப்பிடத்தக்கது.
டைம்ஸ் வெளியிட்ட 'உலகின் செல்வாக்கான நபர்கள் 2011' இறுதி பட்டியல்

http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2066367,00.html

தேவேளை, கடந்த ஏப்ரல் 20ம் திகதி (புதன்கிழமை) தெற்காசியாவுக்கான டைம்ஸின் ஊடகபொறுப்பாளர் ஜோதி டொட்டம் (Jothi Thottam) டைம்ஸில் வெளியிட்டிருந்த கட்டுரையில், இலங்கை நிலவரம் ஒரு அபத்தமான அரங்கமாக காட்சியளிப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
'நவீன அரசனாக மகிந்த ராஜபக்சவின் புகழ் பரப்பும் விடயங்கள்,  இலங்கையின் புராதன நூல்களில் ஒன்றான மகாவம்சத்தின் புதிய வடிவத்தில் (version) இல் இடம்பெறப்போவதை சுட்டிக்காட்டியிருந்த மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளரும், சமூக ஆர்வளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவின் கருத்துக்களையும் தன் கட்டுரையில் பதிவு செய்துள்ள ஜோதி, இதே போன்றதொரு அபத்தம் தான், 'தமது' டைம்ஸ் சஞ்சிகையின் '100' வாக்கெடுப்பில் இடம்பெற்றிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் இலங்கை அரசினால், அதன் உத்தியோகபூர்வ ஊடகங்கள் அனைத்திலும்,  டைம்ஸ் சஞ்சிகை வாக்கெடுப்பு பற்றி தகவல் கொடுக்கப்பட்டிருப்பதையும்,
http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca201104/20110418rajapaksa_heads_influential_national_leaders_in_time_poll.htm
ஐ.நா நிபுணர் குழு அறிக்கையையும் இவ்வாறே, தன் ஆதரவான ஊடகங்களுக்கு அரசு கொடுத்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=23407
மேலும், ஐ.நா நிபுணர் குழு அறிக்கையினால் ஏற்படப்போகும் விளைவிலிருந்து தப்புவதற்காக ரஷ்யாவின் உதவியை இலங்கை நாடியுள்ளதையும், அண்மையில் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் H.E.Valdimir P.Mikhaylov சந்தித்து இது பற்றி கலந்துரையாடியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் ஜோதி டோட்டின் இக்கட்டுரை டைம்ஸில் வெளியிடப்பட்ட அடுத்தநாள், மகிந்த ராஜபக்ச இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: