தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.3.11

யாரு ஹீரோ? யாரு காமடியன்? வடிவேலு-விஜயகாந்த்! அடியல் வீடியோ


நேற்று தொலைக்காட்சியில் இரண்டு பொதுக்கூட்ட பிரச்சார செய்தியைப் பார்க்க நேரிட்டது. (வீடியோ)
ஒரு கூட்டத்தில் வடிவேலு பேசிக்கொண்டிருந்தார். கலைஞரின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையையும் மக்களிடம் விளக்கிக் கொண்டே வந்த அவர், "கலைஞர் அய்யா ஊனமுற்றவர்களுக்கு நிறைய சலுகைகளை அறிவிச்சிருக்காரு" எனப் பேசிவிட்டு, பின் அடுத்த நொடி, "அப்படி சொல்லக் கூடாது. தப்பு. மாற்றுதிறனாளிகள்னு சொல்லனும், என்னை மன்னிச்சுருங்க." என மன்னிப்புக் கேட்டுவிட்டு, "கலைஞர் மாற்றுதிறனாளிகளுக்கு நிறைய சலுகைகள் அறிவிச்சிருக்காரு"னு சொல்லிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

தர்மபுரியில் இன்னொரு பொதுக்கூட்டம். அதில் பேசியவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். கூட்டத்தின் போது விஜய் ரசிகர்கள், விஜய் நற்பணி மன்ற கொடியையும், அதிமுக காரர்கள் அதிமுக கொடியையும் பிடித்தபடி கேப்டனின் பேச்சை(??)க் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை திடீரென கவனித்த கேப்டன் "கொடியை இறக்குப்பா. கொடியை இறக்குப்பா " எனக் கத்திவிட்டு, தன் பேச்சைத் தொடர்ந்தார். அப்போது பாஸ்கர் என்ற வேட்பாளர் பெயரை குடிபோதையில் பாண்டியன் என்று உளறிய விஜயகாந்தை திருத்த முற்பட்ட வேட்பாளரை அதே திறந்த வேனில் பொதுமக்கள் முன்னிலையில் அடி அடியென்று அடித்தார்! ( வீடியோ ) பார்க்கவே பரிதாபமாக இருந்தது அக்காட்சி. ஒருவேளை மக்கள் அவ்வேட்பாளர் மீது இரக்கப்பட்டு வாக்களிப்பார்கள் என கேப்டன் நினைத்துவிட்டாரோ என்னவோ!  

கடந்த தேர்தலின் போது அதிமுக கூட்டத்தில் மதிமுக கட்சிக்காரர்கள் கொடியோடு அமர்ந்திருந்தார்கள். அதைப் பார்த்த ஜெயலலிதா "வைகோ கட்சிக் காரங்களாம் அவரு பேசுற கூட்டத்துக்கு போங்க. இங்க ஏன் வர்றீங்க?" என மேடையில் இருந்தபடியே கத்தியது நினைவிருக்கலாம்! இனம் இனத்தோடு சேர்ந்திருக்கிறது!
                               விறகுக்கடையில் தன் வாழ்க்கையைத் துவக்கிய வடிவேலு 'மாற்றுத்திறனாளிகள்' எனப் பேசும் அளவிற்கு updatedஆக நாகரீகமாக இருக்கிறார், பிரச்சாரம் செய்கிறார்.   பல தீவிரவாதிகளை அடித்து உதைத்து, ஊருக்கெல்லாம் படத்தில் உபதேசம் செய்யும் கேப்டன் படுகீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்! இதுல யாரு ஹீரோ? யாரு காமடியன்?

1 கருத்துகள்:

Jaffri சொன்னது…

படத்துலத் தான் நல்லவர் மாதிரி ஷோ காமிப்பார் விஜய் காந்த்... உண்மையில்.... ???? வேட்பாளர்களுக்கே இந்த கதி என்றால், தொண்டர்களுக்கு???