ஆழப்புழா:முதல்வர் அச்சுதானந்தனை எதிர்த்து பி.ஜே.பி. போட்டியிடாதது, கேரளாவில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மலப்புழா தொகுதியில்,பா.ஜ.கவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருந்தும் அங்கு பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தாதது கம்யூனிஸ்ட் பா.ஜ.கவின் கள்ளத்தொடர்பை உறுத்திபடுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், தோல்வி பயத்தினாலேயே காங்கிரஸ் இக்குற்றசாட்டை கூறுவதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் முரளிதரன் கூறியுள்ளார்.
கடந்த தேர்தல்களிலும்,கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளில் ஏதாவது ஒன்றிற்கு தனது ஓட்டுக்களை பா.ஜ.க. விற்றதாக பரவலாக கூறப்படுகின்றது.
அச்சுதானந்தனின் சில செயல்கள் சங்க பரிவார அமைப்பிடையே நற்பெயரை ஈட்டித் தந்துள்ளது. கேரள மலப்புரத்தில் அங்குள்ள முஸ்லீம்கள் கல்வியில், குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்விலும், தொழில்நுட்ப தேர்விலும் பெரும் வளர்ச்சியை அடைந்தபோது, அவர்கள் காப்பி அடித்ததாலேயெ சாதிக்க முடிந்ததாக அச்சுதானந்தன் கூறியது, சில சக்திகள் லவ் ஜிஹாத் மூலம் கேரள மாநிலத்தை முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாற்ற பார்க்கிறார்கள் என்று அச்சுதானந்தன் டெல்லியில் வந்து கருத்துக் கூறியது, கேரள முஸ்லீம் அமைப்புகளுக்கெதிராக போர்க்கொடி தூக்கியது போன்ற செயல்கள் சங்கபரிவார அமைப்பினரை திருப்பதிபடுத்துவதற்காவே செயப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக