எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், சவுதி அரேபியாவுக்கு தப்பிச்சென்று விட்டதாக வெளிவந்துள்ள தகவல்களை மறுத்துள்ள இராணுவ தரப்பு,
அவர் இன்னமும் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியிட்டுள்ளது. எகிப்தின் சுப்ரீம் கவுன்சிலின் இராணுவ படையினர் நேற்று திங்கட்கிழமை இத்தகவலை வெளியிட்டுள்ளனர். 18 நாட்கள் எகிப்தில்
இடம்பெற்ற தீவிர மக்கள் புரட்சியை அடுத்து, அந்நாட்டு அதிபர் பதவிலிருந்து முபாரக் தூக்கி எறியப்பட்டார்.பெப்ரவரி 11ம் திகதி இராணுவ கவுன்சில் அரசு பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் கடந்த மூன்றாம் திகதி, வெளிவந்த தகவல்களில் ஹோஸ்னி முபாரக் பாதுகாப்பாக எகிப்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர் இப்போது சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்தகவல்களை முற்றாக மறுத்துள்ள சுப்ரீம் கவுன்சில், அவர் அவருடைய குடும்பத்தினருடன், ஷாம் எல் ஷேய்க்கில் உள்ள ரெட் சி விடுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக்வும் அவர் வெளியில் எங்கு செல்லவும் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் அது தெரிவித்துள்ளது.
எகிப்தில் செப்டெம்பரின் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக