அலிகர்:தீவிரவாதிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களுக்கு புனர் வாழ்வுக்காக உதவுவோம் என தேசிய சிறுபான்மை கமிஷன் அறிவித்துள்ளது.
இவர்கள் குற்றமற்றவர்கள் என பரிபூரணமாக சட்டரீதியாக உறுதிச் செய்யப்பட்டால் புனர்வாழ்விற்கான நடவடிக்கைகள் துவங்கப்படும் என கமிஷனின் தலைவர் வஜாஹத் ஹபீபில்லாஹ் தெரிவித்துள்ளார்.
மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தனது கூட்டாளிகளுக்கு நேரடியான தொடர்புள்ளதுக் குறித்து அஸிமானந்தா வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து இவ்வழக்குகள் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கவே இதனை தெரிவித்தார் வஜாஹத் ஹபீபில்லாஹ்.
போதுமான ஆதாரங்கள் இல்லாமலேயே முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். பயங்கரவாத செயல்களில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கின மஹாராஷ்ட்ரா புலனாய்வு அதிகாரிகள் வெளிக்கொணர்ந்த பிறகு இது நிரூபணமாகியுள்ளது என அலிகர் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சர் ஸய்யத் அகாடமி ஏற்பாடுச்செய்த கருத்தரங்கில் “இந்திய ஜனநாயகமும் சிறுபான்மையினரும்” என்ற தலைப்பில் உரைநிகழ்த்த வருகைத் தந்தார் வஜாஹத் ஹபீபுல்லாஹ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக