தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.3.11

சீனாவின் மேலாதிக்கம்! இலங்கையை உடைக்க இந்தியா திட்டம்!!

மார்ச் 30, தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் தீவிரமான முன்நகர்வாக இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகமாகத் திட்டமிடுவதாக பாகிஸ்தானின் த நேஷன் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.

தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலுக்காக சீனாவை நோக்கி இலங்கையின் பார்வை திரும்புகின்ற நிலையில் அதற்கு பாடம் கற்பிக்கும் நோக்கத்துடன் இவ்வாறு திட்டமிடுவதாக

நம்பகரமான முறையில் அறிய வருவதாக அப்பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

இலங்கை மக்கள் மத்தியில் இன, வகுப்பு வாதத்தை உருவாக்குவதன் மூலம் இலங்கையைப் பிளவுபடுத்தும் புதுடில்லியின் திட்டங்களை விக்கிலீக்ஸின் கேபிள்களும் வெளிப்படுத்தி இருப்பதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விடயத்தில் மூன்று வழிகளிலான தந்திரோபாய வேலைகளில் இந்தியா இறங்கியுள்ளது. மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துதல், இந்தியாவுக்கு விசுவாசமான போராளிக் குழுக்களுக்கு ஆதரவளித்தல், போர்க் குற்றங்கள் தொடர்பாக கொழும்புக்கு அழுத்தம் கொடுத்தல்.

சிந்திக்கவும்: இந்தியாவின் முட்டாள்தனமான செய்கையால் இப்பொது இலங்கை சீனாவின் கைக்கு போகி விட்டது. இந்திரா காந்தி தொலை நோக்கு திட்டத்தோடு இலங்கையின் விடுதலை போராட்டத்தை ஆதரித்து அதற்க்கு பயிற்ச்சியும் கொடுத்தார்.

இலங்கையில் தனி தமிழீழம் அமைந்திருந்தால் அது என்றும் இந்தியாவோடு நட்போடு இருந்திருக்கும். அதை புரிந்து கொள்ளாமல் பெரிய ராஜ தந்திரமாக வேலை செய்வதாக எண்ணி இலங்கைக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

ராஜ பக்சே புத்திசாலி அவன் இந்தியாவின் ஆதரவை மட்டும் பெற்றால் பிற்காலத்தில் இடைஞ்சலாக போகும். அதனால் சைனா, பாகிஸ்தான் எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக நடித்து இந்தியாவின் கனவுக்கு வைத்தான் ஆப்பு.

உங்கள் எல்லாருக்கும் வரபோகுது பெரிய ஆப்பு பொறுத்திருங்கள். அமெரிக்காவும், பிரிட்டனும், கனடாவும், பிரான்சும், நாடு கடந்த தமிழீழ அரசை சீக்கிரம் அங்கீகரிக்கும் அப்போது தெரியும் உங்களுக்கு எப்படி நாங்கள் தமிழீழம் அமைப்போம் என்று.

ஈழதமிழர்கள் சிந்திய ரெத்ததிற்கு கூடிய சீக்கிரம் பலன் கிடைக்கும். இந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. முட்டாள்களுக்கும், துரோகிகளுக்கும் பாடம் கற்பிக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

அன்புடன்: சத்திய சீலன்.

நன்றி சத்திய சீலன்: மின்னஞ்சல் செய்திகள்.

0 கருத்துகள்: