தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.3.11

6வது நாளாக லிபியாவில் தொடரும் கூட்டுப்படை தாக்குதல்!


லிபியாவில் 6 வது நாளாக இன்று (வியாழக்கிழமை) நேட்டோ கூட்டுப்படைகள் கடும்
எறிகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் திரிபொலி மீது கடும் ஷெல் வீச்சு இடம்பெற்று வருகிறது.

பொதுமக்கள், அதிகம் வசிக்கும் அஜ் ஜ்fரா, தகோரா மாவட்டங்களின் மீது
கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொல்வதாக கடாபி அரசு அறிவித்துள்ளது.

தம்முடைய இலக்கு பொதுமக்கள் அல்ல. இன்றைய எந்தவொரு எமது தாக்குதலிலும் பொதுமக்கள் உயிரிழக்க வில்லை என கூட்டுப்படை தாக்குதல் (Odyssey Dawn) இன் இராணுவ தலைமை அதிகாரியான லெப்டினென் கொமாண்டர் ஜிம் ஹோஸெஹ்ப்ட் தெரிவித்துள்ளார்.

தங்களது நோக்கம் லிபிய அரச படைகளின் தாக்குதலிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நேற்று புதன் கிழமை மாத்திரம் லிபிய வான்பரப்பில் 175 எறிகணை வீச்சுக்கள் நேட்டோ படைகளினால் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதுடன்

அவற்றில் 113 ஷெல் வீச்சுக்கள் அமெரிக்க விமானங்களால் நடத்தப்பட்டிருந்தது. இதேவேளை மிசரட்டாவில் உள்ளக் கடாபியின் இல்லமும் கூட்டுப்படை தாக்குதலில் தேசமாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்நகரின் மருத்துவமனை மீது, கடாபி இராணுவம் நடத்திய தாக்குதலில் அங்கிருந்த 400 க்கும் அதிகமான நோயாளிகள் படுகாயமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: