தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.3.11

பி, ஜைனுல் ஆப்தீனை சந்தித்து பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆதரவு கேட்பாரா?

மார்ச் 22,: சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அதிமுக கூட்டணிக்கும் ஆதரவு கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் ஆகியோர் சந்தித்து வருகிறார்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். மேலும்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ம.ம.க. தலைமை நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

அதை தொடர்ந்து தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தங்களிடம் இருந்து பிரிந்து போன இயக்கமாகிய தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்திடம் ஆதரவு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் அமைப்பாளர் பி. ஜெய்னுல் ஆப்தீன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ப்பார் என்று தெரிகிறது.

அரசியலுக்கு வந்த பின்னால் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை அப்படின்னு நீங்கள் சொல்வது எங்கள் காதுக்கு கேட்குது. அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா.
பொறுத்திருந்து பார்ப்போம் பேராசிரியரின் அரசியல் வியூகத்தை.

இந்நிலையில் தமுமுக தலைமையகத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் வருகை புரிந்தனர். அவர்களை தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். இச்சந்திப்பின் போது அதிமுக தலைமையிலான கூட்டணியின் தேர்தல் வியூகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. நன்றி: சிந்திக்கவும்

0 கருத்துகள்: