தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.11.12

சரிந்த செல்வாக்கை சரிசெய்யப் பார்க்கும் ராமதாஸ்! தர்மபுரி விவகாரம்... தலித் தலைவர்கள் ஆவேசம்


ர்மபுரி மாவட்டம் தகித்துக்கிடக்கிறது. பற்றி எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தவர், ''தர்மபுரியில் நடைபெற்ற கலவரம் இரண்டு கட்சிகளுக்கோ, இரண்டு சாதியினருக்கோ இடையில் நடந்தது அல்ல. காதல் நாடகத் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தந்தை நாகராஜன், தலித் சமூகத்தினரால் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டார்.

அதனால், நாகராஜ் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைஅடுத்தே கலவரம் ஏற்பட்டது. அதில் வன்னியர்கள், நாயுடுகள், குறும்பர்கள், முதலியார் என அனைத்து சாதியினரும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் என்று அனைத்துக் கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர். தலித்களால் பாதிக்கப்பட்ட மற்ற சாதியினரால் தர்மபுரிக் கலவரம் நடத்தப்பட்டு உள்ளது. அதற்குக் காரணம், தலித்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் மற்ற சாதிப் பெண்கள் செல்ல முடியாது. அங்கு அவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகின்றனர்.
மேலும், தலித் இளைஞர்கள் முன்னேறிய சாதிப்பெண்களை காதல் நாடகத்தால் குறிவைத்துத் தாக்குகின்றனர். நாங்கள் காதலை எதிர்க்கவில்லை. ஆனால், காதல் நாடகத் திருமணங்களை எதிர்க்கிறோம். ஏனென்றால், இதுபோன்ற காதல் நாடகத் திரு மணங்களால் தலித் அல்லாத பிற சாதியினரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
எங்களுக்குக் கிடைத்த தகவல்படி தர்மபுரியில் நான்கு வீடுகள் மட்டுமே கலவரத்தில் எரிக்கப்பட்டன. ஆனால், அங்கு திட்டஅலுவலராகப் பணி​புரியும் தலித் சமூகத்தைச் சேர்ந்த வீரணன் என்ற அதிகாரி தலித் மக்களைத் தொடர்புகொண்டு, 'உங்களுடைய வீடுகளை நீங்களே எரித்துக்கொள்ளுங்கள். அப்போது​தான் புதிய வீடுகளை அரசாங்கம் கட்டிக்கொடுக்கும்’ என்று கூறி இருக்கிறார். அதனால்தான் மற்ற வீடுகளை தலித் மக்கள் அவர்களாகவே எரித்துக்கொண்டனர்'' என்றார். அடுத்துப் பேசிய காடுவெட்டி குரு, இன்னும் ஆவேசமாகப் பேசினார்.
இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பதில் என்ன?
''தர்மபுரி பிரச்னையை தலித் துகளுக்கும் தலித் அல்லாதவர் களுக்குமான பிரச்னையாக டாக்டர் ராமதாஸ் திசை திருப்புவது மிகவும் அபாயகரமானது. இந்தக் கருத்து மற்ற சாதியினரிடம் பரவினால், நிச்சயமாக தமிழகத்தில் தலித்கள் நடமாட முடியாது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்வது அபத்தம். நாங்கள் கொடுக்கும் புகாரை அப்படியே பதிவுசெய்வதற்கு காவல்துறையில் உள்ள அனை வரும் தலித்களா? காதல் மற்றும் திருமண விவகாரங்களில் அரசியல் கட்சிகள் தலை​யிடுவதும், அதைவைத்து அரசியல் செய்வதும் உச்சக்கட்ட அநாகரிகம். இதைத்தான் இப்போது நான் சொல்ல முடியும். நான் வேறு ஏதாவது சொன்னால், அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். திராவிட இயக்கத்தவர்களுக்கும் இடதுசாரிகளுக்கும் இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டிய சமூகப்பொறுப்பு உள்ளது. அவர்கள்தான் இதில் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.
இது குறித்துப் பேசிய சமூக சமத்துவப் படை அமைப்பைச் சேர்ந்த சிவகாமி ஐ.ஏ.எஸ், ''ராமதாஸ் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் கீழ்த்தரமானவை. ஆதிக்க சாதியினர் தங்களுடைய சொத்துக்கள் மற்றவர்களிடம் குறிப்பாக தலித்களிடம் போய்விடக் கூடாது என்பதற்காக சாதி மறுப்புத் திருமணங்களை மறுக்கின்றனர். அதற்காக தலித் இளைஞர்களைப் பற்றி மிக மட்டமான கருத்துக்களை விதைக்கின்றனர். அவர்கள் வீட்டுப் பெண்களின் மனதிலும் இந்தக் கருத்துக்கள் விதைக்கப்படுகின்றன. ஆனால், இந்தப்போக்கு தொடரத் தொடர, அந்தப்பெண்களின் கவனம் தலித் இளைஞர்கள் பக்கம் செல் வதை யாராலும் தடுக்க முடியாது.  
ராமதாஸ், அரசியல் அரங்கில் சரிந்துபோன தனது செல்வாக்கைத் தூக்கிநிறுத்த, தலித்களுக்கு எதிராக வன்னியர்களையும் மற்ற சாதியினரையும் கொம்புசீவி​விடுகிறார்'' என்றார்.
வடமாவட்டங்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது தர்மபுரி சம்பவம்!

0 கருத்துகள்: