தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.11.12

ஐ.நா சபையில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் - மரண தண்டனையை கைவிட முடியாது!இந்தியா


உலக நாடுகள் பலவற்றில் மரண தண்டனையை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே ஐ.நா பொதுச்சபையால் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும், 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்ற யோசனையும் ஐ.நா சபையில் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், மரண தண்டனைக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த ஐ.நா பொதுச்சபை தீர்மானித்தது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான்,

சீனா, ஜப்பான், பங்களாதேஷ், ஈரான், ஈராக், குவைத், லிபியா, கொரியா உள்ளிட்ட 39 நாடுகள் வாக்களித்துள்ளன.
110 நாடுகளின் ஆதரவாகவும் 39 நாடுகள் எதிராகவும் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானத்திற்கு வாக்களித்துள்ளன. இவ்வாக்களிப்பில், 36 நாடுகள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 110 நாடுகளின் ஆதரவுடன் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை,இவ்வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்துள்ள இந்தியா,மரண தண்டனையை கைவிட முடியாது தெரிவித்துள்ளது.
மரண தண்டனையைக் கைவிடுமாறு சமூக மற்றும் மனிதாபிமான விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நா பொதுச்சபையில் முன்வைக்கப்பட்ட யோசனையினை அடுத்து, மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் மரண தண்டனையை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே ஐ.நா பொதுச்சபையால் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்ற யோசனையும் ஐ.நா சபையில் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், மரண தண்டனைக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த ஐ.நா பொதுச்சபை தீர்மானித்தது.

0 கருத்துகள்: