தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.11.12

பாலியல் தொழிலை அங்கீகரிக்க பிரச்சாரம் செய்யவில்லை! விளக்குகிறார் சர்மிளா

பாலியல் தொழில் அங்கீகரிப்பட்ட வேண்டும் என்று நான் பிரசாரம் செய்யவில்லை என சமூக ஆய்வாளரு ம் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற் று அதிகாரியுமான சர்மிளா செய்யத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக பிபிசி த மிழ் செய்தி சேவைக்கு என்னால் தெரிவிக்கப்பட்ட க ருத்து குறித்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுந் துள்ள விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்பி ல் எனது கவலையினை தெரி
வித்து கொள்கின்றேன்.

விபசாரம் இஸ்லாத்தில் வன்மையாக எச்சரிக்கப்பட்டதும் ஹராமாக்கப்பட்டதும் என்பது மறுக்க முடியாத உண்மை. இது தொடர்பில் இஸ்லாமிய பெண் என்ற வகையில் எந்தவித மாற்றுக் கருத்தும் எனக்கில்லை.

சமகால நடைமுறை தொடர்பான எனது கருத்தையே நான் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்திருந்தேனே தவிர சட்டமாக்க வேண்டும் என குறிப்பிட்டவில்லை. நான் இஸ்லாமிய சமூகப் பெண்ணாக இருக்கின்ற காரணத்திற்காக சமூக உண்மையை மறைக்க முடியாது.




பாலியல் தொழில் இலங்கையில் நடைபெறுகின்றது. அது சட்டபூர்வமாக்கப்படும் போது அத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் பெறவும் பாதுகாப்பு பெறவும் வழியை ஏற்படுத்தும் என்பதே எனது கருத்து.

ஒரு பெண்ணாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதையும் வன்மையாககக் கண்டிப்பதாக குறிப்பிட்டிருந்தேன். எனது கருத்து முஸ்லிம் சகோதரர்களின் உணர்வுகளை நோகடிப்பதாக அல்லது பிழையான முறையில் விளங்கிக் கொள்ளத் தக்கதாக இருந்தால் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுகின்றேன்” என்றார்.

- TamilCnn -

இவரின் இக்கருத்து ஒலி வடிவில் BBc இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவரது முழுமையான செவ்வியை செவிமடுக்க கீழ்வரும் link கிளிக் ஐ click பண்ணுங்கள்
http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121120_sharmila.shtml

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என்று தென்பகுதி மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறார். அத்துடன் தேவைப்படின் பாலியல் தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இப்படியாக பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்கின்ற கருத்தை சமூக ஆய்வாளரான, சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சர்மிளா செய்யத் ஏற்றுக்கொள்கிறார்.

இலங்கை ஒரு பாரம்பரிய கலாச்சாரங்களை பின்பற்றுகின்ற நாடு என்கின்ற போதிலும், அங்கு ஏற்கனவே பாலியல் தொழில் மிகவும் அதிகமான அளவுக்கு பரந்திருப்பதால், அதனை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறைக்கு நல்லது என்றும் அதனால், அதில் ஈடுபடும் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கும் என்றும் சர்மிளா கூறுகிறார்.

ஏற்கனவே, பல கிராமிய மற்றும் சிறிய பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், இப்படியாக அந்த தொழில் சட்டபூர்வமாக்கப்படுவது, அவர்களுக்கு சிறிதளவாவது பாதுகாப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.
இருந்தபோதிலும், இந்தத் தொழில் சட்டபூர்வமாக்கப்படுவதால், அந்த தொழிலில் ஈடுபடும் தரகர்களே அதிக பலனைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

- BBC Tamil -

இவரின் இக்கருத்து ஒலி வடிவில் BBc இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சமூக தளங்களில் ஒரு முஸ்லிம் பெண் எவ்வாறு இதைப்போன்ற ஒரு நச்சுக் கருத்தை வெளியிடலாம் என பலரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கு வதற்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ள சர்மிளாவின் கருத்துக்களுக்கு தான் வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்: