தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.11.12

டல்லடிக்கும் 'துப்பாக்கி' பட வசூல்: '5' சீன்களுக்கு கத்தரிக்கோல் பாய்ந்தது


ரே வாரத்தில் சுமார் 65 கோடி ரூபாயை வசூல் செ ய்த துப்பாக்கி படம் இப்போது வசூலில் டல்லடிக்க ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக் கின்றன.விஜய், காஜல் அகர்வால் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் டைரக்‌ஷனில் ரிலீஸான துப்பாக்கி ப டத்தில் முஸ்லீம்களை அப்படியே அப்பட்டமாக தீ விரவாதிகளாக காட்டுவதாக முஸ்லீம்கள் மத்தியி ல் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டி ன் எதிரில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.படத்தை இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினரை சேர்ந்தவர்களுக்கு திரையிட்டு காட்டினர். அதில் உடன்பாடு ஏற்பட்டு 14 காட்சிகள் வரை நீக்கவேண்டும் எனக்கூறினார்கள் தயாரிப்பாளர் தரப்பு 10 காட்சிகளுக்கு ஒத்துகொண்டு  தயாரிப்பாளர் கலைப்புலி தானு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் சார்பில் அவரது அப்பா எஸ்.எ.சந்திரசேகரன் ஆகியோர் ஊடகங்கள் முன்பாக மன்னிப்பும்  கடந்தவாரத்தில் கேட்டதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.
சர்ச்சைக்குரிய சீன்கள் எல்லாமே கண்டிப்பாக நீக்கப்படும் என்று கடந்த ஒருவாரமாக சீன் போட்டு வந்த படத்தின் புரொடியூசர் கலைப்புலி எஸ்.தாணு இதுவரை சொன்னபடி எந்த சீனையும் ஒழுங்காக கட் பண்ணவில்லையாம்.
இதனால் கடுப்பான இஸ்லாமிய அமைப்பினர் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும், துப்பாக்கி படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடப் போவதாகவும் தமிழ் நாடு தவ்ஹீத ஜமா அத் அமைப்பு எச்சரித்ததை தொடர்ந்து ‘துப்பாக்கி’ படத்தின் சில காட்சிகளை முழுவதுமாக இல்லாமல் ஓரளவு கட்டிங் வெட்டிங் நடைபெற்றுள்ளது. 

# மும்பை நகரில் குண்டு வைக்கும் 12 பேரை முஸ்லீம்கள் என்று அவர்களது பெயர்களை விஜய் பட்டியலிடுவது போன்ற காட்சி
# முஸ்லீம்கள் பயங்கரவாதிகள் என்று பேசுவது போன்ற வசன காட்சி
# ஹீரோ விஜய்யின் தங்கையை தீவிரவாதிகள் கடத்தி சென்று கொலை செய்ய முயற்சிப்பதற்கு முன்பாக ‘குரான்’ ஒதுவது போன்ற காட்சி
உட்பட மொத்தம் 5 சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் கத்தரி போடப்பட்டுள்ளதாம். இப்படி ஒரேடியாக படத்தில் 5 காட்சிகள் கத்தரிக்கு இரையாகி விட்டதால் படம் பார்க்கப் போன ரசிகர்களில் பெரும்பாலானோர் கண்டினியுட்டி மிஸ்ஸான கடுப்பில் தியேட்டர்களில் கத்திக் கொண்டே வெளியேறி விடுகிறார்களாம்.
மேலும் முதல் வாரத்தில் வந்த ரிபீட் ஆடியன்ஸ் கத்தரி போட்ட துப்பாக்கியைப் பார்க்க ரிட்டன் வராததால், கோடிக்கணக்கில் போய்க் கொண்டிருந்த துப்பாக்கியின் வசூல் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்திருக்கிறதாம். இப்படியே போனால் தலையில் துண்டை போடவேண்டியதுதான் எனவும் தியேட்டர் அதிபர்கள் முனு முனுக்க தொடங்கிவிட்டார்களாம்.

0 கருத்துகள்: