தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.11.12

மும்பை தாக்குதலை எதிர்கொண்ட கமாண்டோக்களின் இன்றைய நிலை பரிதாபம்! : அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு


மும்பை தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களின் தற்போ தைய நிலை பரிதாபகரமானதாக இருப்பதாகவும், அ வர்களது அடிப்படை உரிமைகள் மத்திய அரசால்ம றுக்கப்பட்டிருப்பதாகவும், அர்விந்த் கேஜ்ரிவால் தெ ரிவித்துள்ளார்.இன்று ஊடகவியலாளர்களை சந்தி த்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோவான சுரேந்தி ர சிங் என்பவருக்கு ரூ.31 லட்சம்
ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும். ஆனால் வெறும் 2.5 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அவர் அன்றைய தாக்குதலில் காயமடைந்தவர். அதே போன்று சுரீந்தர் என்பவருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுவதாக கூறுவதை அரசால் நிரூபிக்க முடியுமா? இல்லையேல் சம்பந்தப்பட்ட நபர் அரசிலிருந்து விலகுவாரா?, தேசத்தை காப்பாற்றும் படைவீரர்கலுக்கே இந்த நிலைமை தொடரும் போது,
இத்தாக்குதலில் தப்பியிருந்த தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டிருப்பதற்கு சந்தோஷப்பட தேவையில்லை. தீவிரவாதிகளுடன் போராடிய தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களின் வாழ்க்கை நிலை இன்னும் மோசமாகவே உள்ளது என அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பதில் அளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திவாரி, சுரேந்தர் சிங்கிற்கு அரசு சார்பில் ரூ.31 இலட்சம் வழங்கப்பட்டிருப்பதாகவும், இந்த இழப்பீடு பற்றிய விவரம் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: