கடந்த மே மாதம் அதிபர் தேர்தலில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரான்சிய அதிபர் ஸார்கோஸியை வெற் றிபெற விடாமல் தடுப்பதற்காக அவருடையஇணை யப் பக்கம் ஹாக் செய்து தடுக்கப்பட்டிருந்தது.இந்தக் காரியத்தை மறைமுகமாக இருந்து செயற்படுத்திய து அமெரிக்காவே என்று பிரான்சில் இருந்து வெளி வரும் எல் எக்ஸ்பிரஸ் எழுதியுள்ளது.இந்த இணை ய வைரஸ் தடுப்புச் சதி நேரடியாக ஸார்கோஸிக்கு நடாத்தப்படவில்லை அவருக்காக தேர்தல் பணியா ற்றிக் கொண்டிருந்த முக்கிய பணியாளரின் கணினி களே செயற்படாமல் ஸ்தம்பிதமடைய வைக்கப்பட்டு,
தேர்தல் பணிகள் மந்த கதிக்குள் தள்ளப்பட்டன.
அதிபர் தேர்தலின் முதலாவது, இரண்டாவது கட்டங்களில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தடை காரணமாக அதிபருடைய பாதுகாப்புப் பிரிவினர் மறுபடியும் இணைய வலையாக்கத்தை செம்மை செய்ய மூன்று தினங்கள் போராட வேண்டியிருந்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் மூன்று மணி நேரம் தாமதமடைந்தாலே தோல்வி வாசற்படிக்கு வந்துவிடும் என்பது தெரிந்ததே.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாகவும் பத்திரிகை சுட்டிக்காட்டினாலும் அமெரிக்க அதிகாரிகள் அதை மறுத்துள்ளார்கள்.
அமெரிக்காவின் கணினி நகர்வில் அதி உச்ச தொழில் நுட்பம் கொண்ட பிளம்ம என்ற தாக்குதல் நிகழ்ச்சித்திட்டத்தை ஆதாரமாகக் கொண்டு இந்தச் சதி வேலை நடாத்தப்பட்டுள்ளதாகவும் அப்பத்திரிகை கூறியுள்ளது.
மேலும் அமெரிக்காவிற்கும் ஸார்கோஸிக்கும் இடையே நல்லுறவு இல்லாத காரணத்தால் இது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அது கருதுகிறது.
ஸார்கோஸி ஆட்சியில் இருக்கும்போது ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலுடன் இணைந்து ஐரோப்பிய பொருளாதாரத்தை மேம்படுத்த எடுத்த முயற்சி, ஜேர்மனி பிரான்ஸ் இரண்டும் புதிய வல்லாதிக்க சக்திகளாக இணைய எடுத்த எத்தனம், ரஸ்யாவுடன் கொண்ட இரகசிய உறவு போன்றன அமெரிக்காவிற்கு மகிழ்வு கொடுக்கும் செயல்கள் அல்ல.
அதைவிட முக்கியம் அமெரிக்காவை புறந்தள்ளி லிபியா மீதான நேட்டோ தாக்குதல்களுக்கு பிரான்ஸ் தலைமை தாங்கியதும் முக்கிய விடயம்.
மேலும் பிரான்ஸ் தலைமையில் உலகை நிர்ணயிக்க புதிய அணியை உருவாக்க ஸார்கோஸி எடுத்த முயற்சியும், அதற்காக நடாத்திய கிறிஸ்துவின் கடைசி இராப்போசனம் போன்ற மாநாடும் அமெரிக்காவுக்கு தூரத்து அச்சத்தை கொடுத்திருக்க வாய்ப்புண்டு.
மேலும் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக ஸார்கோஸியை தோற்கடிக்க வேண்டாமென பிரான்சிய மக்களுக்கு ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கல் விடுத்த வேண்டுதலையும் இப்போது சீர்தூக்க வேண்டியிருக்கிறது.
அவர் நேரடியாக களம் இறங்கியதற்கு அமெரிக்காவின் பின்னணி வேலை காரணமா என்பதும் சிந்தையைத் தூண்டும் கேள்வியாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக