மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் ரயில் நிலையங்களில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 166 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவனான அஜ்மல் கசாப்புக்கு புனே எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.இத்தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அஜ்மல் கசாப்புக்கு தூக்குத் தண்டனை
விதித்து உத்தரவிட்டது. அஜ்மல் கசாப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் உச்ச நீதிமன்றமும் கசாப்பின் தண்டனையை உறுதி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப் பட்ட நிலையில் அஜ்மல் கசாப், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினான். அஜ்மல் கசாப்பின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப் பட்ட நிலையில் சிறை அதிகாரிகள் இன்று காலையில் அஜ்மல் கசாப்பின் தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
அஜ்மல் கசாப்புக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டதை மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலும் உறுதி செய்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக