காசா மீது கடந்த 6 நாட்களாக இஸ்ரேல் படையினர் நடத்திவரும் தாக்குதல்களில் பலியானோர் எண்ணி க்கை 100 ஐ கடந்துள்ளது என அந்நாட்டு நல்வாழ்வு துறை அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் இத்தாக்கு தல்களில் 850 க்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்ப தாகவும், இதில் 260 பேர் வரை குழந்தைகள், 140 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. காசா நகர மையத்தின் சுமார் 80க்கு மேற்பட்ட இலக்குகள் நோ க்கி இஸ்ரேல் படையினர்
வான்வெளியாக எறிக ணை தாக்குதல் நடத்திவருகின்றனர். மேலும் எல்லையில் இஸ்ரேலிய துருப் புக்களும், யுத்த தாங்கிகளும் தரை வழியாக தாக்குவதற்கும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சனின் நெடன்யாகுவிடம், ஐ.நா தலைவர் பான் கீ மூன் தனிப்பட்ட வகையில் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்து, உடனடியாக யுத்தநிறுத்தத்திற்கு உடன்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு சென்று, இது தொடர்பில் அவர் ஏனைய தலைவர்களுடன் இணைந்து தீவிரவாக ஆராய்ந்து வருகிறார்.

எனினும் இஸ்ரேலின் இந்த வெறியாட்ட நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. காசாவின் ஹமாஸ் போராளிக்குழுக்கள், இஸ்ரேலின் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்திவருவதாகவும், அதிலிருந்து தன்னை தற்பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அவதூரான கருத்தை பரப்பிவருகிறார்.
காசாவிலிருந்து ஹமாஸ் போராளி குழுக்கள் தமது பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்திவருவதாகவும், ஆனால் தாம் காஸாவின் தீவிரவாத இலக்குகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. முற்றிலும் பொய்யான தகவல்களாகும் பொதுமக்கள் குழந்தைகள் செம்பிறை சங்கத்தினர்கூட தாக்கப்பட்டு கொத்து கொத்தாக செத்துகிடக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கையிலும் முகநூலிளும் பார்க்கமுடிகிறது ஆனால் இரு நாட்டு தாக்குதல்களிலும் அதிகளவு கொல்லப்படுவது பொதுமக்கள் தான் என அங்கு நேரடியாக களநிலைமைகளை ஆராய்ந்துவரும் ஊடகங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு காசா மீது இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 1400க்கு மேற்பட்டோர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் தொடங்கியுள்ள போர் கடந்த புதன்கிழமை ஆரம்பமானது. அமைதியாக இருந்த பாலஸ்தீன் காசாவின் ஹமாஸின் இராணுவ கட்டளை தளபதி ஒருவரை இஸ்ரேல் படுகொலை செய்தததுடன், இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்கள் நடத்தும் ஹமாஸ் இயக்கத்தை முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்போவதாக சபதமெடுத்துக்கொண்டு இஸ்ரேல் தொடர்ச்சியாக காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது.
இதேவேளை சமாதான பேச்சுவார்த்தைக்குள் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இஸ்ரேல் தற்போது சமிக்ஞை காட்டியுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவிக்குமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அமெரிக்க வெளியுறவு துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் தற்போது இஸ்ரேலுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக