தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.10.12

அவதூறு திரைப்படம்-சென்னையில் முஸ்லிம் மத அறிஞரை சந்தித்தனர் அமெரிக்க அதிகாரிகள்!


முஸ்லிம்களைப் புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக எடுக்கப்பட்ட படத்திற்கு எதிர்வினையாக உலகெங்கும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையிலும் ஐந்து நாட்களுக்கு பல்வேறு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்நிலையில், சென்னை மசூதி ஒன்றின் தலைமை மதகுருவான ஷம்சுத்தீன் காசிமி என்பவரை சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் டேவிட் .கே .கேய்னர் (பொது விவகாரத்துறை அதிகாரி),

மத்தேயு .கே பேஹ்(அரசியல் &பொருளாதார அதிகாரி ) , பின்னி ஜேகப் (மக்கள் தொடர்பு அதிகாரி). ஆகியோர் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
படம் குறித்து அமெரிக்க அரசு தரப்பில் வருத்தத்தையும்,படக்குழுவினருக்குக் கண்டனத்தையும் தெரிவித்த அமெரிக்க அதிகாரிகளிடம்,அமெரிக்கா உடனடியாக நடவடிக்கை எடுக்காதது பற்றி கண்டனம் தெரிவித்துள்ளார் காசிமி.

அமெரிக்க அரசின் சட்டத்தில் கருத்துச் சுதந்திரம் அபரிமிதமாக உள்ளது என்றும், கடந்த 50 ஆண்டுகளாக சட்டத்திருத்தம் செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறிய போது, இனியேனும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிறர் மனதைக் காயப்படுத்துவது  கருத்துச் சுதந்திரத்தின் கீழ் வராது என்றும் மெளலவி தெரிவித்தார்.  உணர்வுகளைப் புரிந்துகொள்வதாகவும், அமெரிக்க அரசிடம் இது பற்றி தெரிவிப்போம் என்றும்  அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நன்றி : இன்நேரம்

0 கருத்துகள்: