கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனுடைய கடந்த கால வரலாற்றை கிண்டியெடுக் க ஆரம்பித்துள்ளது.சென்ற வாரம் வெளியான செய் திகளின்படி அரச செல்வங்களை சூறையாடி வரி மோசடி செய்த 30 பேருக்கு மேற்பட்ட அரசியல் த லைவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியிருந்தது. அதனுடைய பிரதிபலிப்புக்கள் இப்போது மெல்ல மெ ல்ல தெரிய ஆரம்பித்துள்ளன.நேற்று கிரேக்கத்தின் முன்னாள் பிரதி உள்நாட்டு அமைச்சர் லியோனிடா ஸ் ரனீஸ் ( 57 வயது ) தனது
வீட்டின் நிலத்தடி அறையில் தூக்குப் போட்டு த ற்கொலை செய்து கொண்டார்.
வொலோஸ் நகரத்தில் உள்ள இவருடைய வீட்டின் நிலத்தடி அறையில் இவருடைய சடலம் தொங்கிக் கொண்டிருந்தாக மனைவி போன் செய்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் பதவியில் இருந்தபோது இவர் பெரும் ஊழல் செய்தாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மறுபுறம் சீனாவின் சன்கீ மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மண் சரிவில் பாடசாலை ஒன்று சேற்றால் மூடப்பட்டுள்ளது.
இதில் சிக்கி ஒன்பது மாணவர்கள் பரிதாப மரணமடைந்துள்ளனர், இப்பகுதியில் இருந்து சுமார் 800 பேர் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு புறம் நதி, மறுபுறம் ஏரி என்று இரண்டுக்கும் இடையே மாட்டிக் கொண்ட பாடசாலையை சேற்றில் இருந்து விடுவிக்க போராட்டம் நடக்கிறது.
இது இவ்விதமிருக்க ரஸ்ய தலைநகர் மொஸ்கோவிற்கு சுமார் 3000 கி.மீ தொலைவில் தமீர் வட்டகையில் நன்கு பராமரிக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவனுடைய மம்மி வடிவிலான சடல எச்சங்கள் கிடைத்துள்ளன.
இந்தச் சடலம் சுமார் 30.000 வருடங்களுக்கு முந்தியது என்றும் பழுதுபடாத முறையில் மம்மிபோல அடக்கம் செய்யப்பட்டதாக நேற்றைய ரஸ்ய பத்திரிகைகள் எழுதியுள்ளன.
மறுபுறம் கடந்த புதன்கிழமை துருக்கி நோக்கி மோட்டார் கிரனைட் தாக்குதல் நடாத்தி ஐந்து பொது மக்களை கொன்றமைக்கு சிரியா மன்னிப்பு கோரியுள்ளது, இதுபோன்ற தாக்குதல்கள் தொடராது என்றும் தெரிவித்துள்ளது என்று துருக்கியின் துணைப் பிரதமர் பஸீர் அற்றலே இதைத் தெரிவித்துள்ளார்.
இது இவ்விதமிருக்க கடந்த செப்டெம்பர் 27ம் திகதி ஐ.நா இயற்றிய புதிய சட்டமூலமொன்று இன்று ஐரோப்பிய ஊடகங்களில் அதிக இடம் பிடித்தது.
மனித குலத்தின் மரபார்ந்த இயல்பை புரிந்து ஒழுகுவது நாடுகளின் கடமை என்று தெரிவித்துள்ளது.
பெற்ற பிள்ளைகளை பாலியல் உறவுக்கு பயன்படுத்தும், முறைகேடுகள், குடும்ப வெறுப்பில் இரத்த உரித்து உறவினரை கொலை செய்தல், பெண்களின் குறிவெட்டும் இஸ்லாமிய முறை போன்ற காரியங்களை செய்வோர் மனித குல மரபார்ந்த விடயங்களை புரிந்து நடக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகளாக பண்பட்டு மனித குலம் வளர்த்த விழுமியங்களை தப்பாக பயன்படுத்தக் கூடாது என்பது இதன் கருத்தாகும்.
ஆனாலும் இதனுடைய உள்ளார்ந்த கருத்து சரியாக விளங்கப்படுத்தப்படவில்லை முன்னர் பயங்கரவாதம் என்று பட்டியலிட்ட ஐ.நா பயங்கரவாதத்திற்கும் – உரிமைப்போருக்கும் வித்தியாசம் என்னவென்று வரையறை செய்ய முடியாமல் தடுமாறிய கோமாளித்தனம் போலவே இதுவும் இருப்பது கவனிக்கத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக