தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.10.12

நான் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவேன். இம்ரான்கான்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் டெ லிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அ ப்போது அவர் பேசியதாவது:- பாகிஸ்தானில் ஆப் கா னிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மலை பகுதி யி ல் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மூ லம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அடு த் து நான் ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற
தாக்குதல் கள் நடத்த அனுமதிக்க மாட்டேன். மாறாக இதுபோன்ற தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்த பாகிஸ்தான் விமான படைக்கு உத்தரவிடுவேன். அமெரிக்காவின் இந்த தாக்குதல் பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரானது என ஆவேசமாக பேசினார். 

மேலும் அவர் பேசும் போது, வடக்கு வசிரிஸ்தானில் எனது கட்சி பேரணி நடத்த உள்ளது. அதன் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சம் எங்களுக்கு இல்லை. ஏனெனில் தலிபான்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம். 

எனவே பேரணி மிகவும் அமைதியான முறையில் நடைபெறும். அங்கு பேரணி நடத்துவதை பாகிஸ்தான் ராணுவமும் தடுத்து நிறுத்தாது என நம்புகிறோம் என்றார். 

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் தூதர் மேரி ஆன், இங்கிலாந்து பத்திரிகையாளர் லாரன் பூத் ஆகியோரும் கலந்து கொண்டனர். லாரன் பூத் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் தங்கை ஆவார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

0 கருத்துகள்: