இன்று இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான 'தனுஷ்' வெற்றிகரமாக ஒடிசா கட ற்கரையிலிருந்து விண்ணுக்கு செலுத்தப் பட்டுள்ள து.350 Km/h வேகத்தில் அணுவாயுதங்களைச் சுமந்து செல்லவல்ல இந்த ஏவுகணை காலை 11.25 am இற் கு ஒடிசாவின் பலசோரே கடற்கரையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இந்திய இராணுவத்துக்குச் சொ ந்தமான கப்பலில் இருந்து ஏவப்பட்டது.இந்த ஏவுக ணைப் பரிசோதனையினை இந்தியாவின் இராணு வப் பிரிவான SFC (Strategic Forces Command)
மேற் கொண்டிருந்தது. மேலும் 'தனுஷ்' ஏவுகணை எதிர்பார்த்த அனைத்து இலக்கு களையும் பூர்த்தி செய்துள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேற் கொண்டிருந்தது. மேலும் 'தனுஷ்' ஏவுகணை எதிர்பார்த்த அனைத்து இலக்கு களையும் பூர்த்தி செய்துள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
'தனுஷ்' ஏவுகணையைத் தயாரித்தது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்து நிறுவனமான (DRDO) ஐச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆவார்கள். மேலும் தனுஷ் ஏவுகணை குறுகிய தூர இலக்கு உடைய மூலோபாய பல்லிஸ்டிக் ஏவுகணை வகையைச் சேர்ந்தது. இது இந்திய கப்பற்படைக்கு உபயோகிக்கப் படும் எனத் தெரிவிக்கப் படுகின்றது.
நேற்று வியாழக்கிழமை இந்திய இராணுவம் இன்னொரு ஏவுகணையான பிரித்வி-2 ஐப் பரிசோதனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக