தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத் தப்பட்ட ஐந்து பிரதான சந்தேக நபர்கள் பிரித்தானி யாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு ள்ளனர்.இதில் பிரதானமானவரான அபு ஹம்சா அல் மாஸ்ரி மீது, பணயக்கைதிகள் விவகாரம், இரகசிய இராணுவ பயிற்சி வழங்க சதி முயற்சி, புனித போரு க்கு அழைப்பு என்பனவற்றில் அமெரிக்காவால் குற் றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டுள்ளன. எகிப்திய ரான அல் மாஸ்ரி, 1990 களில்,
லண்டன் ஃபேன்ஸ்பரி பார்க் பள்ளிவாசலில் தீ விரபோக்குடைய இஸ்லாமியர்களுக்கு இரகசிய பயிற்சி அளித்ததாகவும், செ ப்.11 தாக்குதலின் பிரதான சூத்திரதாரிக்ளில் ஒருவரான சகாரியாஸ் மௌசா வுய் இந்த பள்ளிவசலுக்கு வருகை தந்திருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட் டுள்ளது. மேலும் 1998 இல், யேமனில், 16 பணயக்கைதிகள் கடத்தப்பட்டிரு ந்தனர். இவர்களில் இரு அமெரிக்க சுற்றுலா பயணிகளும் அடங்கியிருந்தனர். இக்கடத்தலுக்குக்கும் அல் மாஸ்ரியே பின்னின்று செயற்பட்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.முன்வைக்கப்பட்டுள்ளன. எகிப்திய ரான அல் மாஸ்ரி, 1990 களில்,
இதேவேளை தற்போது லண்டனுக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் இருவர் ஒசாமா பின்லேடனின் லண்டன் கைக்கூலிகளாக செயற்பட்டவர்கள் எனவும், மற்றும் இருவர் ஜிகாத்துக்கு ஆதரவான இணையத்தளத்துடன் தொடர்புடையவர்கள் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் பிரித்தனியாவில் தங்கியிருப்பதற்கு வேண்டி கடைசியாக இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது குறித்த ஐவரும் சிறப்பு விமானங்கள் மூலம் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக