அமெரிக்காவில் சிறார்கள் பாலியல் துஷ்பிரயோக ம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிறைய சம் பவங்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவண ங்களை பாய் ஸ்கௌட்ஸ் ஒஃப் அமெரிக்கா என்ற சாரணர் அமைப்பு வெளியிட்டுள்ளது.சாரணர் அமை ப்பின் தலைவர்கள், பொலிசார், சட்ட நடவடிக்கை அதிகாரிகள், நகரத் தந்தைகள் போன்றோர் சிறார் பா லியல் துஷ்பிரயோகம் சம்பந்தமாக எழுந்த ஏராள மான குற்றச்சாட்டுகளை வெளியே பேசமால் எவ் வாறு மூடி மறைத்தனர்
என்று காட்டும் கிட்டத்தட்ட பதினையாயிரம் பங்க ங்களைக் கொண்ட ஆவணத் தொகுதி ஒன்றை அவ்வமைப்பு வெளியிட்டு ள்ளது.
சிறார்களை இப்படியான துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாக்க தங்களால் ஆன அனைத்தையும் செய்ததாக பாய் ஸ்கௌட்ஸ் ஒஃப் அமெரிக்கா கூறுகிறது.
ஒரெகான் மாகாண உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு நெடிய வழக்கு விசாரணையின் பின்னர், இந்த ஆவணத் தொகுதி வெளியிடப்பட வேண்டும் என்று அந்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தற்போது வெளியான ஆவணத் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பல பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் ஏற்கனவே தெரியவந்தவைதான் என்றாலும், 1959 -1971 இடைப்பட்ட காலத்தில் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் சிறார் பாலியல் துஷ்பிரயோகச் குற்றச்சாட்டுகள் வெளியே வருவதென்பது இதுவே முதல்முறை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக