கியூபாவின் புரட்சித் தலைவராக விளங்கிய அதன் மூத்த தலைவரான 86 வயதாகும் பிடெல் காஸ்ட் ரோ சமீபத்தில் பக்கவாதத்தால்(stroke) பாதிக்கப் பட் டிருப்பதாகவும் தன்னைச் சுற்றியுள்ளவர்களை அ டையாளம் காணவும், உண்பதற்கும், கதைப்பதற்கும் முடியாத நிலையில் அவரது இல்லத்தில் மருத்துவ ர்களில் தொடர்ச்சியான கண்காணிப்பில் தங்கியி ருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இவர் இறுதியாக
இந்த வருடம் மார்ச்சில் அதாவது இளவேனிற்காலத்தில் (spring) 'புனித பாப்பாண்டவர் பெனெடிக்ட்' கியூபாவுக்கு விஜயம் செய்த போது அவ ரைச் சந்திப்பதற்காக பொது மக்கள் முன் தோன்றியிருந்தார். இந்நிலையில் தற்போது அவரைக் கண்காணித்து வரும் முக்கிய மருத்துவரான ஜோஸ் மார்க்குயினா என்பவரே அவரது உடல் நலம் குறித்து ஊடகங்களுக்குத் தகவல் வழங்கி வருகின்றார்.

இதில் அவர் முக்கியமாகக் கூறியிருந்த விடயம் என்னவென்றால் காஸ்ட்ரோவைத் தற்போது தாக்கியிருக்கும் 'ஸ்ட்ரோக்' அவரது நரம்பு மண்டலத்தை முற்றாகச் செயலிழக்கச் செய்து இறப்பை ஏற்படுத்த வல்லது என்பதாகும்.
இதேவேளை கியூபாவிலும் அமெரிக்காவிலும் காஸ்ட்ரோ இறந்து விட்டார் எனவும் கோமா நிலைக்குச் சென்று விட்டார் எனவும் பத்திரிகைகள் பல மாதங்களாக ஊகங்கள் வெளியிட்டு வருகின்றன. இருந்த போதும் இதை அவரின் உறவினர்கள் மறுத்துள்ளனர்.
காஸ்ட்ரோ 1959 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை கியூபாவின் அதிபர் மற்றும் பிரதமர் எனப் பல முக்கிய தலைமைப் பதவிகளை வகித்து வந்தவர் ஆவார். உடல் நலச் சீர்கேட்டால் இவர் பதவி விலக 2006 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இவரின் சகோதரர் 'ராவுல்' கியூபாவின் அதிபராகப் பதவி வகித்து வருகின்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக