தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.10.12

பாலஸ்தீன நிவாரண கப்பல் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை தாக்குதல்


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் முற்றுகைக்கு ள் பல ஆண்டுகால சிக்கி இருக்கும் பலஸ்தீன் கா ஸா மக்களுக்கு சிறுவர்களுக்கான பொருட்கள், மற் றும் உணவு நிவாரங்களை ஏற்றிசென்ற கப்பல் ஒன் றை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை இடைமறித்து தாக்கியுள்ளதுன் அந்த கப்பலை கைப்பற்றியுள்ளது .இது தொடர்பாக காஸாவுக்கு சென்றுள்ள நிவாரண அணிக்கான பேச்சாளர் கப்பல் சற்று முன்னர் தாக் குதலுக்கு உள்ளாகியுள்ளது-”come under attack” –

என்று தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவித்துள்ள தகவலில், சற்று முன்னர் கப்பல் இஸ்ரேலிய ஐந்து அல்லது ஆறு இராணுவ படகுகளினால் சுற்றிவளைக்கப்பட்டு ,அதனுள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை நுழைந்து தாக்கியுள்ளது. கப்பல் அவர்களினால் கொண்டு செல்லப்படுகிறது. என்றும் இந்த இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களும், கனேடிய அரசியல்வாதியும் அடங்களாக ஏனையோர் உள்ளகியுள்ளதாகவும் அந்த பேச்சாளர் தெரிவித்துள்ளார் .

இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரிலிருந்து, பின்லாந்து நாட்டுக் கொடியுடன் ஓக்டோபர் 7-ஆம் திகதி புறப்பட்ட எஸ்த்தல் -Estelle-என்ற கப்பலில் 8 நாடுகளைச் சேர்ந்த 20 பேருக்கு அதிகனானவர்கள் இருந்துள்ளனர். அவர்களில் ஐந்து ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களும் , ஒரு கனேடிய அரசியல்வாதியும் அடங்கியுள்ளனர் . என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது .

அதேவேளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் இராணுவப் பேச்சாளர் காஸா கடல்ப்பரப்புக்குள் படகுகள் நுழையாதபடி இஸ்ரேல் போட்டிருக்கின்ற தடைகளையும் மீறி படகு பயணிக்க முற்பட்டபோது, உள்ளே வரக்கூடாது என்று பல தடவைகள் அறிவித்தல் விடுத்தும் படகில் இருந்தவர்கள் அதனை ஏற்க மறுத்ததால் இஸ்ரேலிய கடற்படையினர் அந்தப் கப்பலில் ஏறி தடுக்க வேண்டி ஏற்பட்டதாக கூறியுள்ளார் .

0 கருத்துகள்: