தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.10.12

காற்றின் சுழற்சியால் பஹ்ரைன் எல்லைக்கு தவறி சென்ற 10 தமிழக மீனவர்களுக்கு சிறை


பஹ்ரைன் நாட்டில் கைது செய்யப்பட்ட, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு 15 நாள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெலன் டேவிட்சனுக்கு, கத்தாரில் உள்ள இந்திய தூதரக முதன்மைச் செயலர் பி.எஸ்.சசிக்குமார் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வளைகுடா நாடுகளில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்தமீனவர்கள் கத்தாரில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடந்த

7-ஆம் தேதி காற்றின் சுழற்சியால் பக்ரைன்- கத்தார் கடல் எல்லைக்குச் சென்று விட்டனராம். இதையடுத்து அங்குள்ள கடற்படையினர் 22 மீனவர்களையும் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.அப்போது, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அந்தோனி ஜார்ஜ், சுபீன், டேவிட், டேவிட் ஜார்ஜ், சூசை அட்மின் அந்தோனி, சுதன், ததேயூஸ், அலெக்ஸ், ஆன்டோ, ஜான்சன் ஆகிய 10 பேருக்கு 15 நாள் சிறைத் தண்டனையும், தலா 5000 கத்தாரும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 பேர் மீதான வழக்கு விசாரணை இந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: