தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.10.12

லெபனானில் சக்தி வாய்ந்த குண் டு வெடிப்பு: 8 பேர் பலி


லெபனான் கிறிஸ்தவ பகுதியில் சக்தி வாய்ந்த குண் டு வெடிப்பு: 8 பேர் பலி, 78 பேர் படுகாயம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அஷ்ராபியா சஸ்சின் எனும் சதுக்கத்தில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்று திடிரெ ன வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழந்தனர், 78க் கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.நேற்று பிற் பகல் பெய்ரூட்டில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த போது காரில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் சேதம் அதிக மாக
ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த அம்புலன்ஸ் வாகனங்கள் அவ் விடங்களை நோக்கி விரைந்ததுடன், காயமடைந்தோர் விரைவாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

குண்டு வெடித்த அஷ்ராபியா பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிப்பதாலும்  முன்னாள் பிரதமர் ஷாத் ஹரிரி தலைமையிலான 14 மார்ச் கூட்டணி பொதுச் செயலகத்தை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் எம்.பி ஒருவர் கூறியிருப்பதாக தெரிகிறது.



இதேவேளை இத்தாக்குதலில் லெபனானின் உள்நாட்டு பாதுகாப்பு படைகளின் புலனாய்வு தலைவர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக லெபனானிலும் பதட்டம் அதிகரித்திருப்பதும், கடந்த 4 வருடங்களில் லெபனானில் இடம்பெற்றிருக்கும் மிகப்பெரிய கார் குண்டுத்தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: