ஈராக்கிற்குள் போருக்குள் சென்ற டேனிஸ் படையி னர் முன் பொது மக்கள் மீது மனித உரிமைக்கு முர ணான தாக்குதல்களை நடாத்தும் காணொளி டேனி ஸ் ஊடகங்களில் வெளியாகி தொடர் பரபரப்புக்க ளை ஏற்படுத்தி வருகிறது.நேற்று முழுவதும் டேனி ஸ் தொலைக்காட்சிகளில் காலை முதல் மாலைவ ரை இதே கச்சேரியாகவே இருந்தது.கடந்த 2004ம் ஆ ண்டு செப். 24ல் ஈராக்கில் உள்ள அல் சபையர் நகரி ல் பொது மக்களை கைது செய்து அவர்களை நிலத்தி ல் போட்டு துவம்சம் செய்து
ஆடும் நாடகம் பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
டேனிஸ் படைகளின் ஆசீர்வாதத்துடன் இது நடாத்தப்பட்டுள்ளது.
36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்களில் 15 பேரிடம் ஆயுதமும் 325 கிலோ போதை பொருளும் இருந்தாகக் கூறப்பட்டது.
அன்றைய தினம் கைதானவர் மீது ஈராக்கிய போலீசார் மோசமான சித்திரவதைகளை ஆரம்பித்தாக ஈராக்கிய ஊடகங்கள் எழுதியிருந்தன.
இந்த ஒளி நாடா காலம் கடந்து வெளியானாலும் கூட டேனிஸ் படைகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கும், படைத்துறை சார் நல்லொழுக்கங்களுக்கும் புதிய விதிமுறைகளை எழுத வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.
டேனிஸ் படைகள் பொது மக்களை சந்தேக நபர்களாக கைது செய்து ஈராக்கிய போலீசாரிடம் ஒப்படைத்தால் அவர்களுடைய வாழ்வு மீண்டுவர வாய்ப்பு கிடையாது.
ஈராக்கிய இராணுவத்தைவிட நயவஞ்சகமான காட்டு மிராண்டிகளாக ஈராக்கிய போலீசார் இருந்தனர் இவர்களுடைய அடாவடித்தனங்கள் இந்த மக்களை என்ன செய்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடியாது என்று டேனிஸ் ஆய்வாளர் கூறியுள்ளனர்.
அதேவேளை டென்மார்க்கில் நல்லபிள்ளை வேடம் போடும் படையினர் வெளிநாட்டில் ஒழுக்கக் கேடாக நடப்பதோடு அந்தக் கேவலங்களை நாட்டு மக்களுக்கு மறைக்கும் பொய்யர்களாகவும் இருந்தனர் என்றும் வாதங்கள் கிளம்பியுள்ளன.
டென்மார்க் படைத்துறை அமைச்சர் முன்னரே தான் இந்தக் காணொளியை பார்க்கவில்லை என்றும் நேற்றுத்தான் பார்த்ததாகவும், டேனிஸ் படையினர் வருங்காலத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
ஆனால் இவர் பல வாரங்களுக்கு முன்னரே பார்த்துவிட்டு இன்று பார்த்ததாகக் கூறுகிறார் என்று இன்று அடுத்த குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
ஈராக் போரோ பொய் சொல்லி நடத்தப்பட்ட போர் அதற்குள் இது இன்னொரு பொய் என்று என்கில்ஸ் லிஸ்ற் கட்சி தெரிவித்துள்ளது.
நடந்தது பழைய கதை இனி ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டும், படை என்றால் இப்படி ஒரு சிலர் தவறிழைப்பது வழமை என்கிறது வென்ஸ்ர.
சம்மந்தப்பட்ட படைத்துறை அதிகாரி இந்த ஒளி நாடாவை அறிந்திருந்தும் இப்போதுதான் பார்ப்பதாக நாடகமாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த ஒளி நாடா பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர முடிகிறது.
அதேவேளை சிறீலங்கா இராணுவம் வன்னியில் செய்த செயல்களுடன் ஒப்பிட்டால் இது மிக மிக சிறியதுதான், அந்த நாடு ஒளிநாடாக்களையே பொய் என்கிறது, ஆனால் டென்மார்க்கோ தனக்கு எதிராக வெளியாகியுள்ள இந்த ஒளி நாடாவை ஏற்றுக் கொண்டு கருத்துரைப்பது டேனிஸ் ஜனநாயக மரபுகளின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.
ஆனால் சம்பவம் நடந்ததை உணர்ந்து ஆகவேண்டிய வேலையை பார்க்காமல் படைத்துறையும், படைத்துறை அமைச்சரும் தொடர் பொய்களை உரைப்பது தமக்கு பெரும் கவலையை ஏற்படுத்துவதாக டேனிஸ் உளவுப்பிரிவு அதிகாரி ஆனர்ஸ் கெயாகோட் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக