உலகில் அதிகளவு ஃபேஸ்புக் பாவனையாளர்களை க் கொண்ட இரண்டாவது நாடு இந்தியா என்பது லே ட்டஸ்ட் தகவல்.உலகெங்கிலும் இருந்து ஒவ்வொ ரு மாதமும் 1 பில்லியன் பாவனையாளர்கள் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகிறார்கள். அதில் 65 மில்லியன் இந்தியாவிலிருந்து உபயோகிப்பவர்கள். இந்தியாவிலுள்ள பேஸ்புக் பாவனையாளர்களின் அ திகபட்ச அங்கத்துவத்தின் காரணத்தால் ஃபேஸ்புக் கிற்கு இந்தியா தான் Gold Mines
(தங்கச்சுரங்கம்) என்கிறார்கள்.
இது பற்றி இந்தியாவில் இயங்கும் ஃபேஸ்புக் கிளையின் இயக்குனரான (director of online operations) கீர்த்திகா ரெட்டி கருத்துரைக்கையில், கடந்த இரு வருடங்களில் இந்தியர்களின் பேஸ்புக் பாவணை எண்ணிக்கையில் 8 மடங்காக அதிகரித்துள்ளது எனக் கூறியுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் இணையத்தள பாவனையாளர்கள் 120 மில்லியன் பேரே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடக ஆராய்வுத் தளமான socialbakers கூறுகையில் இந்தியாவில் இணையத்தள பாவனையாளர்களின் எண்ணிக்கை 6 மாதத்தில் 13.5 மில்லியனனாக அதிகரித்துள்ளது எனவும் இத்தொகையில் பெரும்பான்மை 18-24 வயதுக்கு உட்பட்டவர்களால் நிரப்பப் பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
ரெட்டி மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் கணணி டெஸ்க்டோப், மாபைல் ஆகியவற்றில் பயன்படத்தக்க வகையில் தனது மென்பொருள் மற்றும் உற்பத்திப் பொருட்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது எனவும் இந்தியாவிலுள்ள 9 மொழிகளில் மாபைல் போனிலும், 10 மொழிகளில் கணணி டெஸ்க்டோப்பிலும் ஃபேஸ்புக் தற்போது இயங்குவதாகவும் கூறினார். மேலும் இந்தியாவின் முக்கிய தகவல் தொழிநுட்ப நகரமான 'ஹைதராபாத்தில்' ஃபேஸ்புக் தனது புதிய அலுவலகம் ஒன்றை நிறுவ உள்ளதாகவும் கூட அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக