சுவீடனில் உள்ள அமெரிக்க தூதராலயத்திற்கு மர்ம மாக கடிதம் ஒன்று வந்ததால் பெரும் பரபரப்பு ஏற் பட்டு, தூதராலயத்தில் பணியாற்றிய அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் கட்டிட த்திற்குள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.தபால் ஒன்றில் வந்த வெள்ளை நிறமான பவுடரால் ஏற்பட்ட அச்சத் தால் இந்தப் பதகளிப்பு ஏற்பட்டது, தூதராலயத்தில் பணியாற்றிய 150 பேருக்கும் பலத்த அலைச்சலாக இது அமைந்தது.லிபியாவில் உள்ள பெங்காஸி நகர த்தில் அமெரிக்க தூதுவர் சென்ற
மாதம் கொல்லப்பட்ட பின்னர் அமெரிக்க தூத ரங்கள் பெரும் பதட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் நடைபெற்ற பராக் ஒபாமா – மிற் றொம்னி விவாதத்திலும் அமெரிக்க தூதுவர் கொலை முக்கிய இடம் பெற்றது தெரிந்ததே.
இது இவ்விதமிருக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதாரத்துறை கமிசனர் ஜோன் டலி ஊழல் குற்றச் சாட்டில் பதவி விலகியுள்ளார்.
மால்ரா நாட்டைச் சேர்ந்த இவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சுவீடனில் உள்ள சுவீடிஸ் மற்ச் நிறுவனத்துடன் தொடர்பு வைத்து, ஏற்றுமதி விவகாரத்தில் ஊழல் புரிந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
இவர் நேரடியாகவே இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டுள்ளமை தெரிந்த காரணத்தால் பதவி விலகியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக