கொரிய குடா பகுதியில் கடுமையான போர்ப்பதட்ட ம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.தெ ன் கொரியா மீது முன்னறிவித்தல் எதுவுமின்றி தாக் குதல் நடாத்தப்போவதாக வட கொரியா கடும் எச்சரி க்கை விடுத்துள்ளது.தென் கொரியாவை சேர்ந்த அ மைப்பொன்று விமானம் மூலமாக வடகொரிய பகு திக்குள் துண்டுப்பிரசுரங்களை வீசி வருகிறது.இந்த த் துண்டுப் பிரசுரங்கள் கொழுந்துவிட வழியில்லாத வடகொரிய இரும்புலக்கை சர்வாதிகார ஆட்சியின் குறைபாடுகளை
எடுத்துக்கூறிமக்களை சிந்திக்கத் தூண்டியும் வருகிறது. கம்யூனிசத்திற்கு எதிரான இந்தத் துண்டுப் பிரசுரங்களால் வடகொரிய இராணுவப்பிரிவான கே.சி.என்.ஏ கடும் சீற்றமடைந்துள்ளது.
எடுத்துக்கூறிமக்களை சிந்திக்கத் தூண்டியும் வருகிறது. கம்யூனிசத்திற்கு எதிரான இந்தத் துண்டுப் பிரசுரங்களால் வடகொரிய இராணுவப்பிரிவான கே.சி.என்.ஏ கடும் சீற்றமடைந்துள்ளது.
எந்த நேரமும் வடகொரியாவின் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலையில் தாம் இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
இது இவ்விதமிருக்க இன்று சிரியாவின் உள்நாட்டு அமைச்சகத்திற்கு சுமார் 300 மீட்டர் தொலைவில் மிகவும் சக்தி மிக்க தற்கொலைத் தாக்குதல் குண்டு வெடித்துள்ளது.
முன்னர் சிரிய பாதுகாப்பு அமைச்சகத்தில் வெடித்ததைப் போன்ற பலம்மிக்க குண்டானாலும் இலக்கு தவறியதால் சேதம் ஏற்படவில்லை.
இப்படி ஒரு புறம் கம்யூனிச வடகொரியா போருக்கு தயாராக மறுபுறம் கம்யூனிச மன்னனான ரஸ்ய அதிபர் புற்றின் தமது அரண்மனையில் இருந்தே கூடுதல் பணிகளை ஆற்றவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மொஸ்கோவை சுற்றி வாகன நெரிசல்களும், ட்ராபிக் ஜாம் பண்ணுவதும் அதிகரித்துவிட்டது, ரஸ்ய அதிபர் பயணிப்பதால் அடிக்கடி சாலைகள் தடை செய்யப்பட மொஸ்க்கோவே ஸ்தம்பிதமடைந்து விடுகிறது.
இதன் காரணமாக ரஸ்ய அதிபர் காரியாலயத்திலேயே இருக்க முடிவு செய்துள்ளார், அதேவேளை ரஸ்ய பிரதமரும் புற்றினின் கையாளுமான மிடேவ் உலங்குவானூர்தி மூலம் தமது பணிகளை நடாத்த முடிவு செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் மக்களைப்பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளதை இச்செய்தி உணர்த்துகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக