சமீப காலமாக தொலைக்காட்சி ஊடகங்கள் - செய்திக ளை நேரடி ஒளிபரப்பாக சுட சுட தருகிறோம் என்று தொ ல்லைக்காட்சிகளாக, தங்களின் எல்லையை மீறிக்கொ ண்டு - தங்களுக்கு தரப்பட்டுள்ள கருத்துரிமையை முற் றிலும் துஷ்பிரயோகம் செய்து - வன்முறை காட்சிகளை ஒளிபரப்புவதை பார்க்கிறோம். உச்சநீதிமன்றம் ஊடகங் களின் இத்தகைய பொறுப்பற்ற போக்கை கடுமையாக சாடி உள்ளது."26/11 தாக்குதல் - நேரடி ஒளிபரப்பு தவறா னது, ஏற்றுக் கொள்ளவே முடியாதது" என்று உச்சநீதிம ன்றம் - கசாப் வழக்கில் கூறி உள்ளது. மேலும் உச்சமன் ற நீதிபதி கூறியவை... "மும்பை தாக்குதல் சம்பவத்தில், தாஜ் ஹோட்டல் மீது நடந்த தாக்குதலின் போது, ஹோ ட்டலில் நடந்த நிகழ்ச்சிகளை, தாக்குதலை, தீ கொழுந்து விட்டு எரிவதை என் று அனைத்தையும் 24 மணி நேர டிவி சேனல்கள் போட்டி போட்டு நேரடி ஒளிப ரப்பு செய்ததை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இது ஏற்றுக் கொள்ள முடியா த செயல், மிகவும் தவறான செயலும் கூட என்று அது கருத்து தெரிவித்துள்ள து.
தொலைக்காட்சி ஊடக நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப் பட்ட பேச்சுரிமை, கருத்துரிமை என்று இதனை நியாயப் படுத்த முடியாது. சட்டப் பிரிவு 19ன் கீழ் இந்த உரிமைகள் எல்லாம் ஒரு நியாயமான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதும் கூட" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சட்டப் பிரிவு 21ன் கீழ், ஒருவரின் உயிருக்கு உத்தரவாதமான உரிமையைப் பறிக்கும் வகையில் செயல்பட யாருக்கும் உரிமையில்லை, தேசியப் பாதுகாப்பு என்று வரும்போது பேச்சுரிமை கருத்துரிமையைக் காரணம் காட்டி நியாயப் படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக கூறி உள்ளது.
உச்சநீதிமன்ற கருத்தை தொலைக்காட்சி ஊடகங்கள் அப்படியே ஏற்று கொண்டு உடனடியாக திருந்தி விடப்போவதில்லை. அதற்கு தினசரி ஏதாவது சூடான செய்திகள் தேவைப்பட்டு கொண்டே இருக்கிறது. "இழவு வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்பிள்ளையாகவும்" இருக்க ஊடகங்கள் விரும்புகிறது. தம் தொலைக்காட்சி - ஜனங்கள் பார்வையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக - வாரமிருமுறை வரும் நம் புலனாய்வு பத்திரிகைகளை விட தரம் தாழ்ந்து போக தயாராய் உள்ளது.
அதற்கு உதாரணமாக ஒரு செய்தி. சில மாதங்களுக்கு முன்னால் - ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் ப்ளாஷ் நியூஸ் ஓடியது. "மும்பையில் நடுத்தர வயது பெண் கற்பழிப்பு" என்று. கண்டிக்கப்பட வேண்டிய பாலியல் கொடுமையை - அந்த நேரம் பார்வையாளர்களை வரவழைக்க, ஒரு செய்தியாக - அந்த பெண் யார் என அறிந்து கொள்ள விரும்பும் வகையில் - வக்ரமான தலைப்பில், அந்த செய்தியை வெளியிட்டார்கள். பரபரப்பு செய்தி என்கிற தலைப்பில் வர வேண்டிய செய்தியா அது.
அதனால் அந்த பெண் எந்தளவு பாதிக்கப்படக்கூடும் என்கிற ப்ரக்ஜை துளியுமில்லாமல்செயல்படுகிறார்கள். தமிழக செய்தி தொலைக்காட்சிகள் இன்னும் அவர்கள் அளவு தரம் தாழவில்லை என்ற போதிலும் -சென்ற தி.மு.க ஆட்சியில், சட்டக்கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட வன்முறை காட்சிகளை, எதிர்தரப்பு தொலைக்காட்சிகள் - அப்போதைய ஆட்சியின் லட்சணம் என்கிற நோக்கில் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பியது - ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி தொலைக்காட்சி செய்கிற செயலா?
தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் தொலைக்காட்சி அலைவரிசையை வைத்து கொண்டு - தங்கள் வெறுப்பினை,தொலைக்காட்சி வாயிலாக காண்பிப்பத்தால் - அது அமைதியின்மைக்கு வழி வகுக்கும் என்பதனை புரிந்து கொள்ளவில்லையே இரண்டு கட்சிகளின் பெரிய மனிதர்களும். "தேசியப் பாதுகாப்பு என்று வரும்போது பேச்சுரிமை கருத்துரிமையைக் காரணம் காட்டி நியாயப் படுத்த முடியாது" என்று உச்சநீதிமன்றம் சொன்னது மிக சரியே. இங்கே "தேசப் பாதுகாப்பு என்பதை விட மக்கள் பாதுகாப்பு" என்பது மிக முக்கியம்.
ஊடகங்களின் ஈனத்தனமான வேலைகளில் குறிப்பிட்டு சொல்லி கண்டிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி எனில் - அஸ்ஸாம் மாநிலத்தில் ஹோட்டலில் இருந்து வந்த ஒரு பெண்ணை - பலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த - தொலைக்காட்சி கேமரா மேனுக்கோ, அதை தடுக்கும் நோக்கம் துளியும் இன்றி, அதை காட்சிப்படுத்துவதில் தான் குறியாய் இருந்த அசிங்க குணம். கொடுமை நிகழ்கிறவற்றை படம் பிடிக்க தான் அவர்கள் ஆர்வப்படுகிறார்களே ஒழிய - அதை தடுக்க முனைவதில்லை. எல்லா அயோக்கியத்தனங்களையும் வியாபாரமாக்க பார்க்கிறார்கள்.
"எங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது" என்று கேட்கிறார்கள். அயோக்கியதனத்தை ஒழிப்பதல்ல எங்கள் வேலை என்கிறார்கள். "எல்லா அயோக்கியத்தனங்களையும் நாங்களே ஒழித்து விட்டால், எங்கள் பிழைப்பு என்னாகும்" என்று கேட்கிறார்கள். சரி தானே அவர்கள் சொல்வதும். விபச்சாரம் இருந்தால் தானே தரகர்கள் பிழைக்க முடியும்.
இந்தி நடிகர் சஞ்சய் தத்தை சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் கூறியதும் - தொலைக்காட்சிகள் சஞ்சய் தத் நீதிமன்றத்திலிருந்து கிளம்புவதில் துவங்கி - சிறைக்கு சென்றது வரை நேரடி ஒளிபரப்பு செய்தது. சஞ்சய் தத்தென்ன மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்ற ஆளா? பயங்கரவாதிளுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவன் சிறையில் அடைக்கப்படுகிறான். அவன் குறித்த பல்வேறு தகவல்கள் சொல்லி கொள்கிறார்கள் - அந்த நேரலை நிகழ்ச்சியில். அவனுக்கெதற்கு இவ்வளவு மரியாதையும், முக்கியத்துவமும்.தீவிரவாதிகளை தியாகி போல் காட்டும் முட்டாள்தனமான வேலையை ஊடகங்கள் செய்கின்றன.
எதிர்காலத்திலாவது ஊடகங்கள் தங்கள் போக்கினை மாற்றி கொண்டு, பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் அதற்கென்று சில கடுமையான விதிகளை கொண்டு வர நேரும். அப்போது "கருத்துரிமை... எழுத்துரிமை..." என்று கூவி புரியோஜனமில்லை. இரண்டு உரிமைகளை விட முக்கியம் மக்களின் வாழ்வதார உரிமை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக