தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.9.12

98 ஆண்டுக்கு முன்பு கடிதத்துடன் கடலில் வீசிய பாட்டில் கண்டுபிடிப்பு : கின்னஸ் சாதனை.. ‘சன்மான’ வேதனை


கடிதத்துடன் 98 ஆண்டுக்கு முன்பு கடலில் வீசிய பாட்டில், மீனவரிடம் சிக்கியது. இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஸ்காட்லாந்து அருகில் ஷெட்லேண்ட் தீவு பகுதியில் ஆண்ட்ரூ லீபர் என்ற மீனவர் கடந்த ஏப்ரல் மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் பாட்டில் ஒன்று சிக்கியது. பாட்டிலுக்குள் கடிதம் ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார் லீபர்.

ஸ்காட்லாந்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராய கடந்த 1914ம் ஆண்டு அரசு திட்டமிட்டது. அதற்காக 1,890 பாட்டில்களில் போஸ்ட் கார்டுகளை வைத்து கடலில் வீசியுள்ளனர். அந்த போஸ்ட் கார்டில், Ôபாட்டிலை கண்டுபிடிப்பவர்கள், அதை எங்கு கண்டெடுத்தனர், எப்போது.. என்ற விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
அவர்களுக்கு 6 பென்ஸ் நாணயம் சன்மானமாக வழங்கப்படும்Õ என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல்தான் உலகின் மிகப் பழமையான தகவல் என்ற வகையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதை கின்னஸ் நிர்வாகத்தினர் நேற்று உறுதி செய்தனர்.
ஆனால், போஸ்ட் கார்டில் கூறப்பட்டுள்ள பென்ஸ் நாணயங்கள் இப்போது புழக்கத்தில் இல்லை என்பதால் லீபருக்குதான் சன்மானம் கிடைக்கவில்லை.

0 கருத்துகள்: