தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.9.12

ஆப்கானிஸ்தான் இரட்டை தற்கொலைத் தாக்குதல்கள்


ஆப்கானிஸ்தானின் மத்திய மாநிலமான வர்தாக்கி ல் அமைந்துள்ள நேட்டோ படைத்தளத்துக்கு அரு கில் நடந்துள்ள இரட்டை தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 9 பொதுமக்களும் காவல்துறையினர் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகி ன்றனர்.தொடர்புடைய விடயங்கள்துஷ்பிரயோகம், தாக்குதல், மனித உரிமை, கொலை, வன்முறை, போர்அதிகாலை வேளையில் நடந்துள்ள இந்தத்
தாக்குதல்களில் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளும் உள்ளூர் கடைத் தெருவொன்றும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ள இந்தத் தாக்குதல்களை தாமே நடத்தியுள்ளதாக தாலிபன் இயக்கம் உரிமை கோரியுள்ளது.
சய்தாபாத் மாவட்டத்திலுள்ள உள்ளூர் கவர்னரின் இல்லம் அமைந்துள்ள வளாகத்தை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி ஒருவர் முதலில் நேரடித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அதன்பின்னர் அந்த அந்த வளாகத்தையும் அருகிலுள்ள நேட்டோ படைத்தளத்தையும் பிரிக்கின்ற வீதியொன்றில் வெடிபொருட்கள் நிரப்பிய ட்ரக் வண்டியொன்று வெடித்து சிதறியுள்ளது.
இந்த சம்பவங்களில் அப்பகுதியிலுள்ள பல கடைகளும் வீடுகளும் அழிவடைந்தன.
‘தற்கொலை குண்டுதாரி முதலில் நேரடியாக நடந்துவந்து சய்தாபாத் நேட்டோ தளத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வெடித்து சிதறி அவரின் பின்னால் வந்த ட்ரக் வண்டிக்கு வழி
ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்’ என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த இரண்டு தாக்குதல்களிலும் குறைந்தது 47 பேர் காயமடைந்ததாகவும் நேட்டோ படையினர் எவரும் கொல்லப்படவில்லை என்றும் இருவர் மட்டும் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டுப்படைகள் வெளியேறிய பின்னர் அங்கு வன்முறைகள் மேலும் மோசமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்: