வர்த்தகப் பங்குதாரர்களின்வளர்ச்சி மற்றும் மலேசியாவில் இருந்து பீஜி ங், ஹொங்கொங், ஜப்பானின் கன்சாய் ஆகிய பிரதேசங்களுக்கான விமானப் போக்குவரத்து அதிகரிக்கப் பட்டது ஆகிய காரணங்களாலேயே இந்த சுற்றுலாத்துறையின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இவற்றைத் தவிர மலேசியாவில் நடைபெறும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளான Formula 1 மற்றும் Petronas Malaysia Grand Prix என்பவையும் சுற்றுலாப் பயணிகளைக் கவர முக்கியமான காரணங்களாகும்.
மேலும் அதிகபட்சமாக இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜுன் வரை சுமார் 5.8 மில்லியன் சிங்கப்பூர் வாசிகள் மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் இந்தோனேசியாவும் (1.1 மில்லியன்) சீனாவும் (758 000) காணப்படுகின்றன.
இவ்வருடத்துக்கான சுற்றுலாத்துறையில் அபார வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் பிலிப்பைன்ஸும் (45.35%), இரண்டாம் இடத்தில் சீனாவும் (34.2%), மூன்றாவது இடத்தை ஜப்பானும் (32.5%) இதற்கடுத்த இடங்களை இந்தோனேசியா (20%), இந்தியா (6.9%) மற்றும் இங்கிலாந்து (5.9%) ஆகியனவும் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக