நேற்று முந்தினம் மலேசியாவின் 55வது சுதந்திர தினத்தின் போது மலேசிய பிரதமர் டத்தோ நஜிப் துன் ரசாக்கின் டுவிட்டர் பக்கத்தில் 3.6 மில்லியன் டுவிட்டுக்கள் சுதந்திர வாழ்த்துக்களாக பகிரப்பட்டு ள்ளன.மேலும் தலைநகர் கோலாலம்பூரின் தேசிய அரங்கில் #merdeka எனும் குறியீட்டுடன் டுவிட்டர் பதிவிடல் நிகழ்வு, இடம்பெற்ற போது, 10,128 டுவிட் டர்கள் நேரடியாக அதில் பங்கெடுத்து டுவிட் பதிவி ட்டனர். இதுவரை 10,000 டுவிட்டர்கள்
பொதுநிகழ் வொன்றில் கலந்து கொண்ட
தே சாதனையாக இருந்து வந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.பொதுநிகழ் வொன்றில் கலந்து கொண்ட
தற்போது இந்த இரு சாதனைகளும் மலேசிய சாதனை புத்தகத்தில் இடப் பிடித்திருப்பது குறிப்பிடதக்கது.
55வது சுதந்திர தினத்தை மலேசியா நேற்று கோலாகலமாக கொண்டாடியது. மலேயர்கள்,தமிழர்கள், சீனர்கள் என மூவகை இன மக்கள் வாழ்ந்துவரும் மலேசிய நாட்டு 1957ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. இதனையோட்டி நேற்று டத்தரன் மெர்டேகா அரங்கில் காலை 8 மணியளவில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நாட்டின் மன்னரான யங் டி-பெர்துவான் அகோங் மற்றும் இதர பிரமுகர்களை நாட்டின் பிரதமர் டத்தோ நஜிப் துன் ரசாக் ஆகியோர் பங்கேற்ற இவ் நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டது. சுற்றுலா பயணிகள் உட்பட மலேசிய மக்கள் பலர் இக் கொண்டாட்டத்தில் இணைந்திருந்தனர்.
பின் இராணுவ அணிவகுப்புக்களும் பல அணிவகுப்புக்கள் இடப்பெற்றிருந்ததில் சுமார் 13,000பேர் பங்குபெற்றிருந்தனர். ஒரே மலேசியா வாக்குறுதிகளை நிறைவேற்றல் எனும் கருப் பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மாலை 7.30 மணியளவில் அதே தேசிய அரங்கில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தன. கலை கலாச்சார நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் என நடந்த இவ் விழாவில் இளையோர்கள்தான் அதிகம் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போதே டுவிட்டர் பதிவிடல் நிகழ்வு நடைபெற்று சாதனை படைக்கப்பட்டது
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிட்டன் அதிபர் பாராக் ஒபாமா சார்பாகவும் அமெரிக்க மக்கள் சார்பாகவும் மலேசியாவிற்கு 55வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இதனையடுத்து பிரதமர் டத்தோ நஜிப் துன் ரசாக் அமெரிக்காவின் வாழ்த்துக்கு மலேசிய மக்கள் சார்பாக நன்றி தெரிவித்திருந்ததோடு அமெரிக்க மலேசிய உறவுகள் மிக முக்கியமானது என்றும் இந்த உறவு தொடர்ந்து நிலைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக