ஐ.நாவின் உலகளாவிய அணுப்பரம்பலாக்க அமைப் பான ஐ.ஏ.ஈ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை ஈரான் யு ரேனியப்பிரிப்பில் எதிர்பார்த்ததைவிட இன்னொரு மடங்கு அதிகமாக முன்னேறியுள்ளதாக அறிவித்து ள்ளது.நிலத்தடியில் உள்ள மறைவிடங்களில் சுமார் 1000 இடங்களில் ஈரான் அணுக்கரு பிரிப்பை மேற் கொள்வதாக கூறப்பட்டாலும் கடந்த மே மாதத்தில் 1000 ஆகக் காணப்பட்ட அணுப்பிரிப்புக்கள் இப்போ து 2000 ஆக உயர்வடைந்துள்ளதாக எச்சரித்துள்ளது. ஐ.நா
வெளியிட்டுள்ள அறிக்கை தமக்கு ஆத்திரமூட்டுவதாக அமெரிக்கா அறி வித்துள்ளது, சற்று முன்னர் கருத்துரைத்த அமெரிக்க அதிபரின் பேச்சாளர் யே கார்னி கூறும்போது ஈரானின் கையில் அணு குண்டு இருப்பதை அமெரிக்கா ஒரு போதும் அனுமதிக்காது என்று கூறினார்.
வெளியிட்டுள்ள அறிக்கை தமக்கு ஆத்திரமூட்டுவதாக அமெரிக்கா அறி வித்துள்ளது, சற்று முன்னர் கருத்துரைத்த அமெரிக்க அதிபரின் பேச்சாளர் யே கார்னி கூறும்போது ஈரானின் கையில் அணு குண்டு இருப்பதை அமெரிக்கா ஒரு போதும் அனுமதிக்காது என்று கூறினார்.
இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரும் கதவு எப்போது திறக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் காலத்தை உடனடியாகக் கூற முடியாமலிருக்கிறது என்றார்.
அதேவேளை நிலத்தடியில் சுமார் 20 மீட்டர் தடிப்பான சீமெந்து கொங்கிறீற் தடைகளை போட்டாலும் அதைத் துளைத்து சென்று சுரங்கத்தில் இருக்கும் அணு குண்டு முயற்சிகளை முறியடிக்கும் ஏவுகணையை அமெரிக்கா தயாரிப்பதாக இன்னொரு தகவல் கூறுகிறது.
மறுபுறம் இஸ்ரேலில் இன்று காலை வெளியான செய்திகள் ஈரான் மீதான தாக்குதல் எப்போது என்ற கோணத்தில் சீறிப்பாய்ந்துள்ளன.
ஏற்கெனவே மடைத்தனமான ஈராக் போரை நடாத்தி உலக உணவுப் பொருட்கள் எரிபொருள்களின் விலைகளை உயர்த்தி உலகை நெருக்கடிக்குள் தள்ளிய அமெரிக்கா, இனி ஈரானை சுடுகாடாக்கினால் மேலும் பாரிய பிரச்சனைகளை உலக அரங்கில் ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே.
சென்ற யூலை மாதம் மட்டும் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை 10 வீதம் உயர்ந்துள்ளதாக ஐ.நாவும், உலக வங்கியும் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
உலகளாவிய ரீதியில் சோளத்தின் விலை 25 வீதமும் சோயாவின் விலை 17 வீதமும் உயர்வடைந்துள்ளது, அரிசியின் விலை மட்டும் 4 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ண வேண்டிய அவல நிலையை உருவாக்கும் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.
இதற்குள் ஈரானுடன் போர் வந்தால் எரிபொருள் விலை உயர்வு, விலையேற்றம் என்பன உலகின் முதுகெலும்பை உடைத்துவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக