இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்திலுள்ள அஹ்மெதாபாத் நகரில் அமைந்திருக்கும் துணிக்க டை ஒன்றிட்கு 'Hitler' எனும் பெயர்சூட்டப்பட்டிருப்ப துடன் அதிலுள்ள i எழுத்திற்கு மேலே நாசிகளின் ஸ் வஸ்திகா குறியீடு இடப்பட்டும் உள்ளது. ஆண்களுக் கான மேற்கத்தேய பாணியிலான உடைகளை விற் கும் இக்கடை திறக்கப் பட்டு 10 நாட்களே ஆகியுள்ள ன.இந்நிலையில் இக்கடையின்
உரிமையாளர் ராஜேஷ் ஷா AFP இற்கு விளக் கம் அளிக்கையில் இக்கடையின் விளம்பரப் பலகை, லோகோ,வியாபார அட்டை, மற்றும் பிராண்ட் ஆகியவற்றுக்கான செலவை யாரும் ஈடுகட்டுவார்கள் எனில் தான் தனது ஹிட்லர் பெயரை மாற்றுவதற்குத் தயாராக உள்ளேன் எனக் கூறியுள்ளார். அதாவது இதற்காக இவர் கேட்கும் மொத்தப் பணம் ரூ.150 000 ஆகும்.இவர் மேலும் கூறுகையில் இக்கடையைத் தான் திறக்கும் போது ஹிட்லர் யாரென தனக்குத் தெரியாது எனவும் இக்கடையின் பார்ட்னரான தனது பெரியப்பா மிகவும் கண்டிப்பானவர் என்பதால் தான் ஹிட்லர் என்ற பெயர் தெரிவு செய்யப் பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை அஹ்மெதாபாத்திலுள்ள யூதர்களின் சமூகம் இந்தக் கடை உரிமையாளரின் நடத்தைக்கு வருத்தம் தெரிவித்திருப்பதுடன் இவர்களின் சமூகத்தைச் சேர்ந்த மூத்த இஸ்ரேல் ராஜ தந்திரி ஒருவர் இஸ்ரேல் தூதரகம் ஒரு உறுதியான வழியில் இதற்கு நடவடிக்கை எடுக்கும் வரை முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக