தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.9.12

செல்போன் கோபுரங்கள் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!


வளர்ந்து விட்ட தொழில்நுட்ப புரட்சியின் வெளிப் பாடுதான்செல்போன் , ஒருகாலத்தில் பணக்காரர்க ளின் கைகளை அலங்கரித்த செல்போன் தற்போது அனைத்து மக்களாளும் பயன்படுத்தபட்டுவருகிறது. சாப்பாடு கூட இல்லாமல் இருந்திடுவார்கள்போல செல்போன் இல்லாமல் இருக்க முடியாதுன்னு ஆகி ப்போச்சு , ஒரு சிம்ன்னு ஆரம்பிச்சு இப்போ நாலு சி ம் வரை போடக்குகூடிய அளவுக்கு போன் வந்திரு ச்சு, அப்புடியும் பத்தாதுன்னு
சிலபேர் இரண்டு செல்போன்கூட பயன்படுத்துகின்றனர். அதுவும் இல்லாமல் செல்போன் நிறுவன ங்களும்  போட்டிபோட்டுக்கொண்டு கால் கட்டணங்களை தேவைக்கேற்ப உயர்தியும் குறைத்தும் வாடிக்கையாளர்களை ஈர்த்து கொள்ளை லாபம் சம்பாதித்துவருகின்றன, மேலும் தங்களது கோபுரங்களை  அனைத்து இடங்களிலும் நிறுவியுள்ளனர், ஆனால் தற்போதைய சூழலில்  செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு... மனிதர்களுக்கும், மற்ற மற்ற உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்' என்று உலகம் முழுக்கவே விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.இதைப்பற்றி செல்போன் நிறுவனங்களுக்கும் சரி அரசியல்வாதிகளுக்கும் சரி  எந்த அக்கறையும் இல்லை, ஏன்னா இதில்தானே  கோடிக்கணக்கில் ஊழல் செய்ய முடியும்.  இந்த விவகாரம் இப்பொழுது ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பிரச்னையாக வெடிக்க... கோயல் என்பவர் தலைமையில் குழு அமைத்து இதுபற்றி ஆராயச் சொன்னது மாநில அரசு.

செல்போன் கோபுரங்களின் ஆபத்துக்களை பட்டியலிட்டு அறிக்கையும் கொடுத்துவிட்டது இந்தக் குழு. ஆனால், இதை மாநில அரசு அமல்படுத்தாத நிலையில், விஷயம் மாநில உயர் நீதிமன்றத்துக்கு போய்விட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'கோயல் கமிட்டி பரிந்துரைபடி பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களிலிருந்து செல்போன் கோபுரங்களை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்' என்று அதிரடி உத்தரவு போட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும்தான் செல்போன் கோபுரங்கள் மக்களை பாதிக்குமா... மற்ற ஊர்களில்?
இந்தத் தீர்ப்பையே ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு இந்தியா முழுக்க இதை அமல்படுத்தவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். நிறை வேற்றுமா மத்திய மாநில அரசுகள்.........?

0 கருத்துகள்: