தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.9.12

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். கசாப் மரணதண்டனை குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்.

மும்பை தாக்குதல் வழக்கில் கைதான அஜ்மல் கசாப்புக்கு இந் திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்ததை தாங்கள் மதிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்   மான் மாலிக் கூறியுள்ளார்.இது நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவு. எனவே அதைப் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்ப முடி யாது. நீதிமன்றம் இவ்வாறு கூறியிருக்க தகுந்த காரணம் இரு க்கும். இந்திய உச்ச நீதிமன்றமோ அல்லது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றமோ... எதுவாயிருந்தாலும், நீதிமன்றத்தின் முடிவுக்கு நாம் மதிப்பளித்தாக வேண்டும்... என்று கூறினார் ரஹ்மான் மாலிக்.ஈரான்
தலைநகர் டெஹ்ரானில் அணிசாரா நாடுகளின் கூட்டம் நடைபெ
றுகிறது. இதில் கலந்துகொண்டுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி சர்தாரியும் சந்தித்துப் பேசவுள்ளனர். இந்த நிலையில், அவர்களது சந்திப்புக்கு இந்தத் தீர்ப்பானது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

0 கருத்துகள்: