தமிழ் மொழி மற்றும் பண்பாடுகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு அமைப்பு தமிழர் பண்பாட்டு நடுவம். பல பரப்புரைகளை இந்த அமைப்பு இதற்கு முன் செய்துள்ளது. இம்முறை இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பொது மக்களுக்கு தமிழ் மொழியை சேர்க்கும் விதமாக பசை ஒட்டிகளை (ஸ்டிக்கர்ஸ்) விநியோகம் செய்துள்ளனர். தமிழர் பண்பாட்டு நடுவம் செய்திக் குறிப்பில் கூறியதாவது இன்று சென்னை மெரீனா கடற்கரையில் தமிழில் பேசுவோம் தமிழராய் இணைவோம் என்றும் வாழ்க தமிழ்
என்றும் வாகனங்களில் , கடைகளில் பசை ஒட்டிகளை ஒட்டி தமிழர் பண்பாட்டு நடுவம் பொது மக்களிடம் பரப்புரை செய்தது. பலரும் ஆர்வமாக தங்கள் இருசக்கிர வாகனங்களில், தானிகளில் (ஆட்டோ), கடைகளில் வாழ்க தமிழ் என்று பசை ஒட்டிகளை ஒட்டி மகிழ்ந்தனர். தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கிலும் தமிழர்கள் அனைவரும் தமிழில் பேச வேண்டும் என்ற நோக்கிலும் பரப்புரை செய்யப்பட்டது.

பொது மக்கள் பலரும் இந்த செயலை வரவேற்பதோடு பாராட்டவும் செய்தனர். இன்னும் தமிழ் மொழிக்கு மக்கள் சிறந்த வரவேற்பு கொடுக்கின்றனர் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்கள் யாவர்க்கும் நமது நன்றிகள். இன்று ஆயிரம் பசை ஒட்டிகளை ஒட்ட திட்டமிட்டோம். மழை குறுக்கிடவே முழுமையாக பசை ஒட்டிகளை ஒட்ட முடியவில்லை. மேலும் இத்தகைய பரப்புரைகள் தொடரும். மக்களிடம் வெவ்வேறு வடிவங்களில் தமிழ் மொழியையும் பண்பாடுகளையும் கொண்டு செல்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக