தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.9.12

ஆப்கான் படைகளுக்கான பயிற்சி நிறுத்தம்


ஆப்கானில் உள்ள அமெரிக்கப்படைகள் அந்த நாட்டி ல் ஒரு படைத்துறையை உருவாக்குவதற்காக பல் லாயிரக்கணக்கானோருக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது.இவ்விதம் பயிற்சி பெறுவோருக்குள் தந் திரமான முறையில் தாலிபான்களும் தமது ஆட்க ளை உள் நுழைத்துள்ளபடியால் தாலிபான்கள் யார்.. தாலிபான் அல்லாதவர் யார் என்ற மயக்கம் நீடிக்கிற து.ஆப்கான் படைகளின் சீருடைய அணிந்த தாலிபா ன்கள் பல நேட்டோ படைகளை பல இடங்களில் கொன்றொழித்துவிட்டார்கள்.
அமெரிக்கப் படைகளில் மட்டும் 45 பேர் இறந்து ள்ளார்கள், இந்த இக்கட்டான நிலையில் புதியவருக்கான பயிற்சிகளை நிறுத் துவதாக அமெரிக்கப்படைகள் அறிவித்துள்ளன.
புதிதாக படையணிக்கு வந்துள்ள 27.000 பேரும் கடுமையாக விசாரணை செய்யப்பட்டு, வடிகட்டிய பின்னரே பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
தற்போதய நிலையில் அமெரிக்காவால் பயிற்றப்பட்ட 130.000 படைகள் தலபான்களுக்கு எதிராக போராடி வருகின்றன, பாயாசத்தில் பயறு போல இதற்குள் தலபான்களும் கலந்து கிடக்கிறார்கள்.
எதிர்வரும் 2014 உடன் நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு வெளியேற அங்குள்ள படைகளே நாட்டின் பாதுகாப்பை பொறுப்பேற்க இருக்கின்றன.
இவர்களில் பலர் திருடர்களாகவும், திடீரென பொது மக்களை சுட்டுக் கொல்லும் மன நோயாளிகளாகவும் இருக்கிறார்கள்.
திருத்த முடியாத இடியப்ப சிக்கலாக உள்ளனர் இந்த கில்லாடிகள் என்பது ஊடகங்களில் வெளிவராத ஆனால் ஆங்காங்கு கசியும் உண்மையாக உள்ளது.
அமெரிக்கப் படைகள் வெளியேறியதும் பரிகளாகிய குதிரைகள் நரிகளாக மாறிய கதை போல ஒரு கதை இங்கும் அரங்கேறலாம் என்ற அச்சத்தை வோஷிங்டன் போஸ்ற் வெளியிட்டுள்ளது.
வாழை மட்டையில் தீப்பிடிக்கும் என்று நெருப்பூதிய மூடன் போலவும் – இலவம் பஞ்சை பழமென எண்ணி காத்திருந்த இலவு காத்த கிளி போலவும் ஆப்கானில் ஜனநாயகத்தை கொண்டுவர பாடுபடும் நேட்டோவின் அவல நிலை உள்ளது.

0 கருத்துகள்: