தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.7.12

நேபாள சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு கொலையானார்


நேபாள சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரானா பகதூர் பம் 61, இவர் நேற்று காத்மாண்டுவில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் பைக்குகளில் வந்து காரை வழிமறித்தனர். திடீரென நீதிபதி மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த ரானாவை உடனடியாக

மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ரானா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.





துப்பாக்கிச் சூட்டில் ரானாவின் பாதுகாவலரும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

0 கருத்துகள்: